Thursday, October 20, 2016

•அக்-10, உலக மனநல தினம்

•அக்-10, உலக மனநல தினம்
மன நலத்துக்கான முதலுதவி என்பது இந்த ஆண்டு உலக மனநல நாளின் மையக் கருத்தாக செயல்படுத்தப்படுகிறது.
மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, இந்த ஆண்டு மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர்.
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் டாக்டர் தம்பிராஜா அவர்கள் “மனநோய்களும் மனக்கோளாறுகளும்” என்னும் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந் நூல் மனநோய் பற்றிய விழிப்புணர்வை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களிடையே பரவலாக காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி, மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, மறதிநோய் முதல் உளவியல்ரீதியான பாலியல் கோளாறுகள் வரை இந் நூல் விளக்குகின்றது.
தனது மருத்துவ அனுபவங்களினூடாக ஒரு அரிய நூலை தமிழில் எழுதி தமிழ் சமூகத்திற்கு பெரிதும் உதவி புரிந்த டாக்டர் தம்பிராசா அவர்களின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment