Thursday, October 20, 2016

ஜெயா அம்மையார் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கெதியாய் சொல்லித் தொலையுங்கடா!

•ஜெயா அம்மையார் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை
கெதியாய் சொல்லித் தொலையுங்கடா!
தன்மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அப்பலோ மருத்துவமனையைவிட்டு ஜெயா அம்மையார் வெளிவரப்போவதில்லை.
ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை யாரும் ஜெயா அம்மையாரை நேரில் பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு போட்டோகூட மக்களுக்கு காட்டப்படவில்லை.
கடந்த 5 நாட்களாக அப்பலோவும் ஜெயாஅம்மையாரின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிடவில்லை.
பதவியில் இருக்கும் முதலமைச்சருக்கு என்ன நோய் என்பதைக்கூட மக்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் வதந்தி பரப்பினார்கள் என்று பத்துக்கு மேற்பட்டவர்கள் மீது பொலிஸ் வழக்கு போட்டுள்ளது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.
கூடங்குளத்தில் மேலும் 3 அணு உலைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. அதற்கு எதிராக போராட வேண்டிய தமிழக அரசு செயலற்று கிடக்கிறது.
அதிமுக தொண்டர்கள் அப்பலோ மருத்துவமனையை ஒரு அம்மன் கோயிலாகவே ஆக்கிவிட்டார்கள்.
தினமும் புதிது புதிதாக நூதனமான முறையில் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
இதுபோதாது என்று நம்ம காசி ஆனந்தன் அய்யாவும் அப்பலோ சென்று “அம்மாவின் தேக நலன் தமிழீழ தேசத்தின் நலன்” என்று அறிக்கை விடுகிறார்.
உஸ்ஸ் அப்பா! தாங்கமுடியலையடா.
கெதியாய் தீர்ப்பை சொல்லி தொலையுங்கடா!

No comments:

Post a Comment