Thursday, October 20, 2016

•மருமகன் செய்த தவறுக்கு மாமனாருக்கு தண்டனை வழங்கும் தமிழ் நீதிபதிகள்!

•மருமகன் செய்த தவறுக்கு மாமனாருக்கு தண்டனை வழங்கும் தமிழ் நீதிபதிகள்!
தமிழ் இணைஞர் ஒருவர் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு 100 ஆயிரம் பவுண்ஸ் செலவு செய்து திருமணம் செய்ததாக லண்டன் ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இதே ஆங்கில பத்திரிகைகள் பரமேஸ்வரன் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்தபோது களவாக பேகர் சாப்பிட்டார் என்று செய்தி போட்டு பின்னர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பரமேஸ்வரனுக்கு நட்டஈடு வழங்கியுள்ளன.
பொதுவாக லண்டன் ஆங்கில பத்திரிகைகள் முதலாளிகள் செய்யும் மில்லியன் கணக்கான வரி ஏய்ப்புகளை போடுவதில்லை. மாறாக சாதாரண கறுப்பு இன மக்கள் செய்யும் தவறுகளை இனத் துவேசத்துடன் மிகைப்படுத்தி எழுதுவார்கள்.
அதேபோன்று இப்போதைய செய்தியின் பின்னால் எந்தளவு உண்மை இருக்கிறது என்று தெரியுமுன்னரே எமது தமிழ் ஊடகங்கள் ஆங்கிலப் பத்திரிகை எடுத்த வாந்தியை அப்படியே நக்கியுள்ளன.
கடந்த வாரம் ஒரு சிங்கள இளைஞர் இதேபோன்று பண மோசடி குற்றத்திற்காக லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் எந்த சிங்கள் ஊடகமும் அவருடைய தவறுக்கு அவர் மாமன்குற்றவாளி என்று எழுதியதில்லை.
ஆனால் எமது தமிழ் ஊடகங்கள் சில தற்போது தமிழ் இளைஞர் செய்த தவறுக்கு மாமனாரை குற்றம் சுமத்தி தண்டனை வழங்குகிறார்கள்.
விசாரணை செய்த பொலிசாரோ அல்லது தீர்ப்பு வழங்கிய நீதிமன்றமோ அல்லது செய்தி போட்ட ஆங்கில பத்திரிகையோ மருமகனின் தவறில் மாமனாருக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிடவில்லை.
ஆனால் எமது தமிழ் ஊடக நீதிபதிகள் மாமனார் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் என்பதாலும் அவர் மாவீரர் பணிமனை அமைக்க முயல்கிறார் என்பதாலும் அவர் மீது தண்டனை விதிக்கிறார்கள்.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களின் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாதவர்கள் அவதூறுகளால் அவர்களை ஒழிக்க முயல்கிறார்கள்.
“விவாதம் செய்ய முடியாதவன் அவதூறை கையில் எடுக்கிறான்” என்று அறிஞர் சோக்கிரட்டீஸ் கூறியது உண்மைதான்.

No comments:

Post a Comment