Thursday, October 20, 2016

•எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

•எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு விருப்மில்லை என்று நேரிடையாக பிரதமர் மோடி கூறியிருக்கலாம்.
ஆனால் அவர் பாராளுமன்றம் இரு அவைகளும்கூடி அங்கீகரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறார்.
குஜராத் மாநிலத்திற்கு தண்ணீர் தருகின்ற நதி நர்மதா. இந்த நதி நீரை மத்தியபிரதேசம், மகாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்கின்றன.
இந்த நதிநீர் பங்கீட்டிற்காக NWDT அமைக்கப்பட்டது. 1969ல் அமைக்கப்பட்ட இந்த நடுவர் மன்றம் தனது தீர்ப்பினை 1978 ம் ஆண்டு அளித்தது.
இந்த தீர்ப்பின்படி 1980 ம் ஆண்டு NCA (Narmada Control Authority) அமைக்கப்பட்டு இதுவரை நதிநீர் பங்கீட்டை சிறப்பாக அமல்படுத்தி வருகிறது.
மோடியின் மாநிலமான குஜராத்திற்கு தண்ணீர் தருகிற NCA அமைக்க எந்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
எந்த பாராளுமன்ற சட்டமும் இல்லாமல்தானே குஜராத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது?
இப்போது தமிழ்நாட்டிற்கு மட்டும் பாராளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்று எதற்காக பொய் சொல்ல வேண்டும்?
குஜராத்திற்கு ஒரு நியாயம்? தமிழ்நாட்டிற்கு இன்னொரு நியாயம்? இதுதான் மோடியின் நியாயம்??
தமிழர்களும் இந்தியர்கள்தானே என்று பிரதமர் மோடி கருதவில்லை.
தமிழர்களும் இந்துக்கள்தானே என்று பிரதமர் மோடி கருதவில்லை.
தமிழர்களும் மனிதர்கள்தானே என்றுகூட பிரதமர் மோடி கருதவில்லை.
இந்தியாவில் மாட்டுக்கு காட்டும் பரிவைக்கூட தமிழர்களுக்கு காட்ட பிரதமர் மோடி தயாரில்லை.
உண்மைநிலை இப்படி இருக்க, மறவன் புலவு சச்சிதானந்தம் என்பவர் இந்திய பிரதமர் மோடி உதவுவார் என்று கூறி வவனியாவில் சிவசேனை என்ற இந்து அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவில் ஏழு கோடி தமிழர்களுக்கு உதவாத பிரதமர் மோடி, இலங்கையில் 20 லட்சம் இந்து தமிழ் மக்களுக்கு உதவுவார் என்று எப்படி இவர் நம்புகிறார்?
இந்திய உளவுப்படை வீசி எறியும் பிஸ்கட் துண்டுகளுக்காக ஈழத் தமிழர்களை பிரிப்பதற்கே இந்த சிவசேனை உதவுகிறது.

No comments:

Post a Comment