Thursday, October 20, 2016

•கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே!

•கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே!
கவிதைக்கு பொய் அழகாக இருக்கலாம்
ஆனால் அரசியலுக்கு பொய் ஒருபோதும் அழகல்ல
“அம்மாவின் தேக நலன் தமிழீழ தேச நலன் “ என்று
கவிதை நடையில் வழக்கம்போல் பாடியுள்ளீர்கள்.
எப்படி கொஞ்சம்கூட வெட்கமின்றி கூச்சமின்றி ஒரு ஊழல் ராணியின் தேக நலன் தமிழீழத் தேசத்தின் நலன் என்று உங்களால் கூறமுடிகிறது?
இதைக் கேட்பவர்கள் நாளை எம் இனத்தை பார்த்து கேலி பேச மாட்டார்களா? காறி உமிழ மாட்டார்களா?
66 கோடி ரூபா மக்கள் பணத்தை கொள்ளையடித்து 4 வருட தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியின் நலன் எப்படி தமிழீழ தேசத்தின் நலனாக இருக்க முடியும்?
உச்சநீதி மன்ற தீர்ப்பிற்காக ஓடிப் போய் அப்பலோவில் படுத்துள்ள ஒரு முன்னாள் நடிகையின் நடிப்புத் திறன் எப்படி தமிழீழ தேசத்தின் நலனாக இருக்க முடியும்?
ஒரு நடிகையாக அரசியலுக்கு வந்து ஒரு ரூபா சம்பளம் மட்டுமே பெற்று இன்று 45ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களை கொண்டிருப்பவரின் நலன் எப்படி தமிழீழ தேசத்தின் நலனாக இருக்கமுடியும்?
சிறப்புமகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாதவர் தமிழீழ விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றியதை எப்படி நம்புவது?
அகதிமுகாமில் இருக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுத்தவர் தமிழீழ மக்களுக்கு உதவுவார் என்று எப்படி நம்புவது?
அகதி முகாம்களில் பொலிசாரினாலும் அதிகாரிகளாலும் துன்புறுத்தப்படுவதை தடுக்காதவர் ஈழத்தில் மக்கள் துன்புறுத்தப்படுவதை தடுப்பார் என எப்படி நம்புவது?
ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றவர்களின் பரோல் விடுதலையையே மறுப்பவர் அவர்களின் விடுதலைக்கு வழி செய்வார் என்று எப்படி நம்புவது?
கடந்த 33 வருடங்களாக தமிழகத்தில் இருக்கும் அகதிகளுக்கு பிராஜவுரிமை கிடைக்க வழி செய்யாதவர் தமிழீழம் கிடைக்க வழி செய்வார் என எப்படி நம்புவது?
கவிஞர் அவர்களே!
தமிழக மக்களை நம்புங்கள்.
தமிழக மக்களால் மட்டுமே எமக்கு உதவ முடியும்.
தமிழ்நாட்டு முதலமைச்சரை நலம் விசாரிக்க சென்ற ஈழத் தமிழர்கள்

No comments:

Post a Comment