Thursday, October 20, 2016

•சர்வாதிகார சவூதி மன்னரும் ஜனநாயக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரியும்!

•சர்வாதிகார சவூதி மன்னரும்
ஜனநாயக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரியும்!
சவூதி அரேபியாவில் சர்வாதிகார மன்னராட்சி நடைபெறுகிறது. இருந்தும் அந் நாட்டு மன்னர் கொலைக் குற்றம் பரிந்த தன் இளவரசரை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.
இலங்கை ஜனநாயக நாடு என்கிறார்கள். ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்களை அழைத்து விசாரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவன்காட் ஊழல் தொடர்பாக கோத்தபாயாவும் அவரது கூட்டாளிகளான கடற்படை தளபதி மூவரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஆணையத்தின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கோத்பாயாவும் மற்ற மூவரும் யுத்த ஹீரோக்கள் என்றும் அவர்களை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் பகிரங்கமாக தனது எதிர்ப்பை ஜனாபதி தெரிவித்துள்ளார்.
இதனால் லஞ்ச ஊழல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
மக்களே யுத்த ஹீரோவான மகிந்த கும்பலை தோற்கடித்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களே கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் நல்லாட்சி அரசு புரிவதாக கூறிக்கொள்ளும் மைத்திரி அரசு மக்கள் ஆணைக்கு மாறாக மகிந்த கும்பலை பாதுகாக்க முற்படுகிறது.
நாமல் ராஜபக்ச மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் நாணய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்போது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் வேலை தருவதாக கூறி பல பெண்களை நாமல் ராஜபக்ச பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படுகிறது. இதுவரை இதுதொடர்பாக 109 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆனால் நாமல் ராஜபக்ச சுதந்திரமாக உலாவுகின்றார். அதுபோல் நிதி மோசடி குற்றச்சாட்டப்பட்ட பசில் ராஜபக்ச சுதந்திரமாக திரிகிறார். கோத்தபாயா சுதந்திரமாக திரிகிறார். மகிந்தவின் மைத்துனர் நடேசன்கூட சுதந்திரமாக திரிகிறார்.
மக்களின் எதிர்ப்பையடுத்து “தான் விசாரணையை நிறுத்தக் கோரவில்லை என்றும் படைத் தரப்பினரை விசாரணைக்கு அழைக்கு முன்னர் தனக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றே கூறியதாக மைத்திரி தற்போது கூறுகிறார்.
எந்தவித இடையூறும் இன்றி செயற்படுவதற்காகத்தானே சுயாதீன விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படுகிறது.
அப்புறம் விசாரணைக்கு அழைக்கப்படுமுன்னர் தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் எதற்கு சுயாதீன குழுக்கள்?
மைத்திரி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறார். மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
மக்கள் மைத்திரியையும் விசாரணைக் கூண்டில் எற்றி விசாரிக்கும் நாள் விரைவில் வரும்.
ஆம். மக்களே மிகப் பெரிய நீதிபதிகள்.

No comments:

Post a Comment