Monday, October 10, 2016

எவன்டா அது “எழுக தமிழ்” கூட்டத்தைவிட பாலசுப்பிரமணியம் கச்சேரிக்கு வந்த கூட்டம் அதிகம் என்று கத்துவது?

எவன்டா அது “எழுக தமிழ்” கூட்டத்தைவிட பாலசுப்பிரமணியம் கச்சேரிக்கு வந்த கூட்டம் அதிகம் என்று கத்துவது?
என்ன செய்வது? கத்தின இந்திய விசுவாசியும் தமிழன்தான். அவனைக் கத்த வைத்த யாழ் இந்திய தூதரும் தமிழன்தான்!
தமிழ் இனம் எதிரிகளால் அழிந்ததைவிட தன் இன கோடரிக்காம்புகளால் அழிந்ததே அதிகம்!
இதேநாளில்தான் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஈழத் தமிழர் யுத்தம் ஆரம்பித்தார்கள். யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாத இந்திய அரசு இப்போது நயவஞ்சகமாக ஆக்கிரமிக்க முயல்கிறது.
இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடி உயிர் துறந்த போராளி மாலதி நினைவு நாளில் பாலசுப்பிரமணியம் கச்சேரியை இந்திய தூதர் நடத்தியது வெறும் தற்செயலானது அல்ல.
நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலிலே யாவும் நடைபெறுகிறது.
தமிழ் இனம் இதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறது?
வீழ்வது அவமானம் அல்ல. வீழ்ந்து கிடப்பதே அவமானம்.
மீண்டும் தமிழ் இனம் எழும்!

No comments:

Post a Comment