Monday, October 10, 2016

அழுத பிள்ளை பால் குடிக்கும் போராடிய மக்கள் உரிமைகளைப் பெறுவர்! தமிழ் மக்கள் ஒருமித்து எழுவது காலத்தின் கட்டாயம்

•அழுத பிள்ளை பால் குடிக்கும்
போராடிய மக்கள் உரிமைகளைப் பெறுவர்!
தமிழ் மக்கள் ஒருமித்து எழுவது காலத்தின் கட்டாயம்
யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கழிந்துவிட்டன.
இன்னும்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
இனியும் தமிழ் மக்கள் பொறுமையாக இருக்க முடியாது.
ஓன்று திரண்டு போராடுவதன் மூலமே உரிமைகளைப் பெற முடியும்.
இல்லையேல் அடிமையாக கிடந்த அழிந்து போக வேண்டியதுதான்.
தமிழ் மக்களிடம் வோட்டு பெற்று பதவி பெற்றவர்கள்
தமிழ் மக்களுக்காகப் போராடாமல் ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் போராடாவிட்டாலும் பரவாயில்லை. மக்கள் தாங்களாகவே போராட முன் வந்தாலும் அதை தடுத்து துரோகம் செய்கிறார்கள்.
•தமிழ் பிரதேசங்களில் சிங்கள் பௌத்த மயமாக்கலை நிறுத்த கோரியும்
•சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும்
•இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்
24ம் திகதி யாழ் நகரில் எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளது.
இதில் கட்சி பேதமின்றி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
யார் இந்த பேரணியை நடத்துகின்றார்கள் என்பது பொருட்டு அல்ல. மாறாக நியாயமான இந்த பேரணியை யார் நடத்தினாலும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
ஆனால் பேரணியை முன்நின்று நடத்தவேண்டிய தமிழரசுக்கட்சி தான் இதில் பங்கு பற்ற போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரும் சுமந்திரனும் எதிரான கருத்துகளை தெரிவித்து பேரணியை குழப்ப முயலுகின்றனர்.
இன்னும் சிலர் இதுவும் “சிங்கள லே” போன்று ஒரு இனவாத பேரணி என முத்திரை குத்த முயலுகின்றனர்.
ஒடுக்கும் இனத்தின் பேரினவாத “சிங்கள லே” யும் ஒடுக்கப்படும் இனத்தின் எழச்சி பேரணியும் ஒன்றாகி விடாது.
ஒடுக்கப்படும் இனம் போராடாமல் அடிமையாக இருக்க வேண்டும் என விரும்புவோரே அதன் போராட்டத்தை இனவாதமாக சித்தரிக்க முயல்வார்கள்.
எழுக தமிழ் பேரணியானது போராட்ட சக்திகளையும் துரோக சக்திகளையும் தமிழ் மக்களுக்கு நன்கு இனம் காட்டுகிறது.
தமிழ் மக்களின் எழுக பேரணியை குழப்ப முயல்வோர் வரலாற்றில் துரோக சக்திகளாகவே அடையாளப் படுத்தப்படுவார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment