Monday, October 10, 2016

•இவனுகள் இத்தனை நாளும் என்ன "கோமா"விலா கிடந்தாங்கள்?

•இவனுகள் இத்தனை நாளும் என்ன "கோமா"விலா கிடந்தாங்கள்?
செய்தி- இலங்கையில் இந்துக் கோயில்கள் இடிப்பிற்கு எதிராகவும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் சென்னையில் பல இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன.
1983ம் ஆண்டு முதல் இதுவரை பல கோயில்கள் இடிக்கப்பட்டன.
பல கோயில்களுக்கு மேல் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.
பல கோயில்கள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் செய்யப்பட்டன.
விலையுயர்ந்த சிற்ப தேர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
ஏல்லாவற்றுக்கும் மேலாக கோயில்களில் தஞ்சமடைந்த மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
பல தமிழ் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அந்த இடங்களில் புதிதாக பல புத்த விகாரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதேசங்களின் தமிழ் பெயர்கள் அழிக்கப்பட்டு பௌத்த சிங்கள பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இத்தனையும் செய்யும்போது மௌனமாக இருந்த இந்த இந்து அமைப்புகள் இப்போது மட்டும் எதற்காக போராட்டம் நடத்துகின்றன?
இத்தனை நாளும் மௌனமாக இருந்த கவிஞர் காசி ஆனந்தன் இப்போது எதற்காக இந்துத் தமிழீழம் கேட்கிறார்?
இத்தனை அழிவுகளையும் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு வந்தபோது பலத்த பாதுகாப்பு மட்டுமன்றி செங்கம்பள வரவேற்பும் கொடுத்த இந்த இந்து அமைப்புகள் இப்பொது யாரை ஏமாற்றுவதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?
இந்திய ஆக்கிரமிப்பின் “எட்கா” ஒப்பந்தம் இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் சம்பூரில் இந்திய ஆக்கிரமிப்பக்கு எதிராக மூவின மக்களும் ஒன்று சேர்ந்து போராடி வென்றுள்ளனர்.
எனவே, தமிழ் மக்களும் சிங்கள் மக்களும் ஜக்கியப்பட்டால் தங்கள் ஆக்கிரமிப்பை தொடர முடியாது என்பதை உணர்ந்த இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் இலங்கை மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதற்காகவே இந்த இந்துமதப் போராட்டத்தை நடத்துகின்றன.
இந்திய அரசு கவிஞர் காசி ஆனந்தனை விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை வாங்கவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது.
இனி, இந்திய அரசை நம்பி தமிழ் மக்கள் ஏமாறப் போவதுமில்லை.

No comments:

Post a Comment