Monday, October 10, 2016

•“இந்திய ஒருமைப்பாடு” என்பது கர்நாடகாவின் நலன்களுக்காக தமிழகம் அழிவது அல்ல!

•“இந்திய ஒருமைப்பாடு” என்பது கர்நாடகாவின் நலன்களுக்காக தமிழகம் அழிவது அல்ல!
நடுவர் மன்ற தீர்ப்பின்படி வரட்சியான காலங்களில் 68 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடகா இதுவரை 33 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டிருப்பதாக கூறுகின்றது.
நியாயப்படி இன்னும் 35 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட வேண்டிய உச்சநீதிமன்றம் வெறும் 13 டிஎம்சி தண்ணீரையே திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
தனக்க சார்பான இந்த உத்தரவையும்கூட நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக அரசு கூறிவிட்டது. அதுமட்டுமன்றி தாங்கள் தனிநாடு கேட்கப் போவதாக கர்நாடக எழுத்தாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி கூடங்குள அணுமின்நிலையம் அமைய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி கெயில் குழாய் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,
மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவுக்காண தேர்வு குறித்த விசாரணை முடியுமுன்னரே தமிழக அரசின் விருப்பத்திற்கு மாறாக திணித்த உச்சநீதிமன்றம்,
காவிரி விடயத்தில் மட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக உத்தரவிட தயங்குவது ஏன்?
சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கான பந்த் நடைபெற்றபோது அதனை ஆதரித்தமைக்காக அன்றைய தி.மு.க அரசை நீக்கி ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என மிரட்டிய உச்சநீதிமன்றம் இன்றைய கலவரங்களுக்கு ஆதரவாக செயற்படும் கர்நாடக அரசை அதேபோன்ற மிரட்ட தயங்குவது ஏன்?
உச்சநீதிமன்றமே தமிழகத்திற்கு ஒரு நியாயமும் மற்ற மாநிலங்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்கினால் இந்திய ஒருமைப்பாட்டில் தமிழகம் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும்?
கர்நாடக பிஜேபி தலைவர் தண்ணீர் தர முடியாது என்கிறார். மத்திய பிஜே.பி அமைச்சர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்த முடியாது என்கிறார்.
ஆனால் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் இந்திய ஒருமைப்பாடு பற்றி தமிழ் மக்களுக்கு போதிக்கின்றனர்.
கர்நாடக எழுத்தாளர்கள் தாங்கள் தனிநாடு கேட்போம் என பகிரங்கமாக கூறுகின்றனர். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆனால் தமிழகத்தில் யாராவது தனிநாடு கேட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
ஒருமைப்பாடு என்பது பரஸ்பரம் நலன் கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக கர்நாடக நலன்களுக்காக தமிழகம் அழிய வேண்டியதில்லை.
இந்திய ஒருமைப்பாட்டிற்காக தமிழகம் அழியுமாயின் அந்த ஒருமைப்பாடு தமிழர்களுக்கு தேவையில்லை.

No comments:

Post a Comment