Monday, October 10, 2016

“எழுக தமிழ்” பேரணி சொல்லும் சேதி என்ன?

“எழுக தமிழ்” பேரணி சொல்லும் சேதி என்ன?
ஆயிரக் கணக்கில் தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
வியாபாரிகள் கடையைப் பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் கூட பலர் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பேரணி மூலம்
பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படப் போவதில்லை
சர்வதேச விசாரணை நடைபெறப் போவதில்லை
சமஸ்டித் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை
இது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால் இந்தப் பேரணி மூலம் தமிழ் மக்கள் உலகிற்கு முக்கிய சேதி சொல்லியிருக்கிறார்கள்.
ஒரே நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று அழித்தால் அந்த இனம் மீண்டும் போராட துணியாது என்று இலங்கை அரசு நினைத்தது.
ஆனால் பல்லாயிரம் மக்களை பறிகொடுத்த நிலையிலும் தமிழ் மக்கள் மீண்டும் எழுவர் என்பதை இந்த பேரணி மூலம் நிரூபித்து இருக்கிறார்கள்.
1971ம் அண்டு அழிக்கப்பட்ட ஜே.வி.பி இயக்கம் மீண்டும் 1989ல் எழுவதற்கு 18 வருடங்கள் பிடித்தது.
ஆனால் 2009ல் 40 அயிரம் மக்களை பறிகொடுத்த தமிழ் இனம் 7 வருடத்தில் மீண்டும் எழுந்து உலகிற்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இந்த பேரணியில் இன்னொரு அதிசயமும் நடந்துள்ளது.
தமிழ் மக்களின் தலைமை என கூறப்பட்ட தமிழரசுக்கட்சி முற்றாக ஒதுங்கிய நிலையில் தமிழ் மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒன்று திரண்டுள்ளனர்.
ஒரு இனத்தின் தலைமையை பதவி கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டால் அந்த இனம் போராடுவதை தடுத்துவிடலாம் என நம்பிய இலங்கை அரசிற்கு பலத்த அடியை தமிழ் மக்கள் கொடுத்துள்ளார்கள்.
இலங்கை அரசிற்கு மட்டமன்றி இலங்கை அரசிற்கு உதவி வரும் இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசுகளுக்கும் தமிழ் மக்கள் இந்த பேரணி மூலம் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
தமக்குரிய உரிமைகள் தராமல் மறுக்கப்பட்டால் தாம் போராட தயங்கமாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த செய்தியானது உலகில் போராடும் இனங்களுக்கெல்லாம் மகிழ்வும் உறுதியும் அளிக்கும் செய்தியாகும்.
அந்தளவில் இந்த பேரணி ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

No comments:

Post a Comment