Monday, October 10, 2016

•சம்பூர் மக்கள் பெற்றுள்ள வெற்றி மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது.

•சம்பூர் மக்கள் பெற்றுள்ள வெற்றி
மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் நிறுவப்படும் சம்பூர் அனல்மின் நிலையம் நிறுத்தப்படுவதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இது சம்பூர் மக்களின் வெற்றியாகும். அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்தியாவை வெளியேற்றினால் சீனா வந்தவிடும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் கூறினார்
இந்தியாவின் உதவி மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள இருப்பதால் இந்தியாவை வெளியேறு எனக் கேட்க முடியாது என்று தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறினார்.
இவ்வாறு நம்பிய தமிழ் தலைவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் சம்பூர் மக்கள்; தனியாக மட்டுமன்றி தைரியமாகவும் போராடினார்கள்.
இந்தியா பெரிய நாடு. அதனை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று சிலர் வாரமலரில் கட்டுரை எழுதினார்கள்.
ஆனால் சம்பூர் மக்கள் தொடர்ந்து போராடினார்கள். ஆவர்களின் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி லண்டன் கனடா வாழ் தமிழ் மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.
சம்பூர் மக்களின் வெற்றியானது மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை மறுபடியும் இன்னொருமுறை நிரூபித்துள்ளது.
சும்பூர் மக்களின் வெற்றியானது இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வெற்றி பெற முடியம் என்ற நம்பிக்கையை தோற்றுவித்தள்ளது.
இன்று சம்பூரில் இருந்த விரட்டியதுபோல் விரைவில் மழு இலங்கையில் இருந்தும் இந்திய ஆக்கிரமிப்பு விரட்டியடிக்கப்படும்.
இது உறுதி.

No comments:

Post a Comment