Monday, October 31, 2016

•துபாய் முதலாளியும் இந்திய அம்பானி முதலாளியும்!

•துபாய் முதலாளியும் இந்திய அம்பானி முதலாளியும்!
இந்தியாவில் வீடற்றவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கும் நிலையில் 5 பேர் கொண்ட அம்பானி குடும்பம் வசிக்கும் மும்பை வீட்டின் பெறுமதி 4700 கோடி ரூபாய்.
அந்த வீடு,
27 மாடிகள்
600 அறைகள்
168 கார் பார்க்கிங்
9 லிப்ட்
3 கெலிகப்டர் இறங்கு தளம்
1 தியேட்டர்
1 ஜிம்
600 வேலையாட்கள். கொண்டது.
அதன் ஒரு மாத மின் கட்டணம் மட்டும் 71 லட்சம் ரூபாய்.
முதலாளி அம்பானி ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. ஆனால் அம்பானியின் மனைவிக்கு மக்களின் வரிப் பணத்தில் “இசட்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
முதலாளி அம்பானி ஏழைகளுக்கு உதவாவிடினும் இந்திய அரசு ஏழைகளுக்கு உதவலாம் அல்லவா?
இந்திய அரசு ஏழைகளுக்கு
ரீ – 1.00 ரூபா
சூப் - 5.50 ரூபா
டால் - 1.50 ரூபா
சாப்பாடு – 2.00 ரூபா
சப்பாத்தி – 1.00 ரூபா
பிரியாணி - 8.00 ரூபா
சிக்கன் - 24.00 7பா
மீன் - 13.00 ரூபா என மலிவு விலையில் உணவு வழங்குகிறது.
ஆனால் இந்த மலிவு விலை உணவைப் பெறுவதற்கு ஏழைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனெனில் இது பாராளுமன்ற கன்டீனில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்திய அரசைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஏழைகள். அவர்களுக்கு மட்டுமே மலிவு விலையில் உணவு வழங்குகிறது.
துபாயில் அப்துல் அஜீஸ் என்ற முதலாளி ஒருவர் இருக்கிறார். அவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்விக்காக வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய சொத்தின் பெறுமதி 1.14 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 76 லட்சம் கோடி ரூபா ஆகும்.
துபாய் மற்றும் இந்திய முதலாளி பற்றி சொல்லிவிட்டு நம்ம ஈழத்து முதலாளி பற்றி சொல்லாவிட்டால் நல்லாய் இருக்காது அல்லவா. எனவே ஒரு சின்ன கொசுறு செய்தி.
நம்ம லைக்கா முதலாளி லண்டனில் சிக்வெல் என்னும் இடத்தில் மிகவும் விலையுயர்ந்த பங்களாவில் வசிக்கிறாராம். அவர் ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் பிரித்தானிய ஆளும் கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளாராம். அதேவேளை அவரது கம்பனி மீது பண மோசடி மற்றும் பல குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளனவாம். லண்டன் ஆங்கிலப் பத்திரிகை இப்படி கூறுகிறது.
நீதி- செல்வம் சரிவரப் பங்கிடாமையே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும்.

No comments:

Post a Comment