Monday, October 31, 2016

வடமாகாணசபை முதலமைச்சருடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய உரையாடல்

•வடமாகாணசபை முதலமைச்சருடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய உரையாடல்
நேற்றைய தினம் லண்டனில் கிங்ஸ்பெரி என்னும் இடத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
முதலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கிங்ஸ்ரன் நகர சபையுடன் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட இரு நகர உடன்படிக்கை பற்றி விளக்கினார்.
அதையடுத்து முதலமைச்சரின் தனிச் செயலர் நிமலன் அவர்கள் உடன்படிக்கையின் நன்மைகள் குறித்து விளக்கினார்.
அதன்பின்னர் முதலமைச்சரின் செயலர் இராஜதுரை அவர்கள் வடமாகாணத்தில் செய்யக்கூடிய முதலீடுகள் குறித்து விளக்கினார்.
இறுதியாக கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அவரது செயலர்கள் பதில் அளித்தனர்.
கலந்துகொண்டவர்களின் நுழைவுக் கட்டணம் மற்றும் அன்பளிப்பு சுமார் 25 லட்சம் ரூபா பணம் முதலமைசரிடம் வழங்கப்பட்டது.
•பாராட்டு- புலம்பெயர் தமிழர் சமூகத்தின் மத்தியில் ஒரு பலமிக்க வர்த்தக சம்மேளனத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காக பாடுபடும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் உண்மையில் பாராட்டுக்குரியது.
•அவதானிப்பு- கூட்டம் 6 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக 7.30 மணிக்கே ஆரம்பமானது. இனிமேல் இப்படி நிகழாமல் நேரத்தை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
•சந்தேகம்- இலங்கை அரசு என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே மேற்குல நாடுகளின் உதவிகளைப் பெறுவதற்காக தமிழர் இனப்பிரச்சனையில் தான் ஆக்கபூர்வமாக செயற்படுவதாக காட்டிக்கொள்ள முயல்கிறது. எனவே இந்த இரு நகர உடன்படிக்கை மூலம் இலங்கை அரசு அதனை சாதிக்க முயல்கிறதா என்ற சந்தேகம் உருவாகிறது.
கிங்ஸ்ரன் மற்றும் வடமாகாணம் இருநகர உடன்படிக்கை போன்று கனடா மார்க்கம் மற்றும் வன்னிக்கிடையில் இரு நகர உடன்படிக்கை விரைவில் ஏற்படவுள்ளதாக கனடா கவுன்சிலர் ஒரவர் அறிவித்துள்ளார். அதேபோன்று வடக்கு கிழக்கு பல மாவட்டங்கள் கனடாவில் சில நகரங்களுடன் இத்தகைய உடன்படிக்கைள் மேற்கொள்ளவுளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி இவர்கள் விபரமாக தெரியப்படுத்துவார்களா?

No comments:

Post a Comment