Monday, October 10, 2016

•தொடரும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

•தொடரும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
பயங்கரவாதத்தைக் காரணம்காட்டி பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் உச்சி மாநாட்டை இந்தியா பகிஸ்கரித்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையும் மாநாட்டை பகிஸ்கரிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இந்தியாவுக்காக இந்தளவு தூரம் தனது வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை ஒருபோதும் விட்டுக்கொடுத்தது கிடையாது.
அதுமட்டுமல்ல இலங்கை அரசு பதவியேற்று ஒருவருடமே நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இதுவரை ஜனாதிபதியும் பிரதமரும் மூன்று தடவை இந்தியா சென்றுள்ளனர்.
தற்போது நான்காவது தடவையாக ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நேரத்தில் இந்தியா செல்கின்றனர்.
ஒரு நாட்டின் இரு அதி உயர் தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே நாட்டிற்கு செல்வதில்லை என்ற சம்பிதாயத்தையும் மீறி இவர்கள் செல்கின்றனர்.
இவர்கள் ஏன் அடிக்கடி இந்தியா செல்கின்றனர் என்பதையோ அல்லது இந்தியா இவர்களை ஏன் அடிக்கடி அழைக்கிறது என்பதையோ இலங்கை இந்திய மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
இந்நிலையில் இலங்கை மக்களின் கடும் எதிர்பிற்குள்ளாகியிருக்கும் “எட்கா” ஒப்பந்தம் மார்ச் மாதமளவில் நிறைவேற்றப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
சம்பூர் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து இந்திய அரசின் அனல் மின்நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று பலாலி மக்களின் எதிர்ப்பையடுத்து பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்திய அரசிடம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் அறிவித்ததுள்ளார்.
அத்துடன் தலைமன்னார் ராமேஸ்வரம் பாலம் ஒருபோதும் அமைக்கப்படாது என இலங்கை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இவை யாவும் இலங்கை மக்களின் ஒருமித்த எதிர்ப்பினால் இந்திய ஆக்கிரமிப்பிற்கு கிடைத்த பலத்த அடியாகும்.
எனவேதான் ஜனாதிபதியையும் பிரதமரையும் இரகசியமாக அழைத்து ஆக்கிரமிப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட இந்தியா முனைகிறத.
மகிந்த ராஜபக்ச தலைமையானாலும் அதன்பின் வந்துள்ள மைத்திரி-ரணில் தலைமையானாலும் யாவும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு துணை போவதாகவே இருக்கின்றன.
எனவே இலங்கை மக்கள் ஒருமித்து தொடர்ந்து போராடுவதன் மூலமே இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும்.

No comments:

Post a Comment