Monday, October 10, 2016

தமிழ் இனத்தின் "கோடரிக்காம்பா" சுமந்திரன்?

•தமிழ் இனத்தின் "கோடரிக்காம்பா" சுமந்திரன்?
தன் இனத்தை அழிக்க துணை போனவர்களை “கோடரிக் காம்பு” என்றும் “கருங்காலி” என்றும் அழைக்கப்படும்.
தமிழ் இனத்தை அழிக்க துணை போகும் சுமந்திரன் ஒரு கோடரிக் காம்பு என்றும் கருங்காலி என்றுமே வரலாறு பதிவு செய்யப் போகிறது.
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்ட எழக தமிழ் பேரணி நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
இரண்டு கண்களம் இரு கைகளும் அற்ற முன்னாள் போராளி ஒருவர் பேரணியை விளக்கேற்றி ஆரம்பித்துள்ளார்.
உலகில் உள்ள தமிழர் எல்லாம் பேரணி வெற்றி பெற வேண்டும் என விரும்பியிருந்தனர்.
ஆனால் சுமந்திரன் மட்டும் ஆரம்பத்தில் இருந்து பேரணிக்கு மட்டுமன்றி தமிழ் இனத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்.
ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பேரணி குறித்து எதுவும் கூறாத நிலையில், சிங்கள இனவாதிகள்கூட மௌனமாக இருக்கும் நிலையில் சுமந்திரன் மட்டும் எதற்காக இதனை நல்லிணக்கத்திற்க எதிரானது என்று கூறவேண்டும்?
அடக்கப்படும் ஒரு இனம் தனது உரிமைகளைக் கேட்பது நல்லிணக்கத்திற்க எதிரானது என்றால் உரிமையைக் கேட்காமல் தமிழ் இனம் அடிமையாகஇருக்க வேண்டும் என்று சுமந்திரன் விரும்புகிறாரா?
முன்பு கதிர்காமர் என்று ஒரு தமிழர் இருந்தார். அவருக்கு அமைச்சு பதவி வழங்கி அவரை தமிழ் மக்களுக்கு எதிராக அன்றைய சந்திரிக்கா அரசு பயன்படுத்திக்கொண்டத.
இன்று சுமந்திரனுக்க தமிழ் மக்கள் பதவி வழங்கியிருந்தபோதும் அவர் அற்ப சலுகைகளுக்காக தமிழ் இனத்திற்க எதிராக “சின்ன கதிர்காமராக” தொடர்ந்து செயற்படுகிறார்.
அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
காணமல் போனோர் இன்னம் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
இவை குறித்து எதுவும் பேச முன்வராத சுமந்திரன் எழுக பேரணி க்கு எதிராக மட்டும் ஏன் அவசரமாக கருத்து தெரிவிக்கிறார்?
முதலில், நடந்தது இனப் படுகொலை அல்ல. வெறும் போர்க் குற்றம் என்றார்.
பின்னர், சர்வதேச விசாரணை தேவையில்லை. சர்வதேச நீதிபதிகள் கொண்ட உள்ளுர் விசாரணை என்றார்.
இப்போது, எந்த விசாரணையும் அற்ற நிலையில் அது குறித்த எந்த கருத்தும் தெரிவிக்காத சுமந்திரன் தமிழ மக்கள் தாங்களாகவே எழுச்சி கொண்டால் ஏன் எரிச்சல் படுகிறார்?
யாரை திருப்திப்படுத்தவதற்காக எழுக தமிழ் பேரணி நல்லிணக்கத்திற்க எதிரானது என்று சுமந்திரன் அறிக்கை விடுகிறார்?
சிங்கள பொலிஸ் பாதுகாப்பில் இருந்துகொண்டு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்க எதிராக துரோகம் செய்யலாம் என சுமந்திரன் நினைக்க வேண்டாம்.
துரோகிகளை தூக்கி எறிய தமிழ் வரலாறு என்றும் தயங்கியதில்லை என்பதை சுமந்திரன் கவனத்தில் கொள்வது நல்லது.

No comments:

Post a Comment