Monday, October 10, 2016

•வெற்றிடத்தை புதிய காற்று மட்டுமல்ல நச்சுக் காற்றும் நிரப்ப முயலும்!

•வெற்றிடத்தை புதிய காற்று மட்டுமல்ல நச்சுக் காற்றும் நிரப்ப முயலும்!
இந்த பூமியில் எங்கு வெற்றிடம் தோன்றினாலும் உடனே அந்த இடத்தை காற்று நிரப்பும்.
அதுபோல் ஒரு இன விடுதலைப் போராட்டத்தில் தலைமை அழிக்கப்படுமாயின் இன்னொரு புதிய தலைமை உருவாகும்.
வெற்றிடத்தை நிரப்பும் காற்று எப்போதும் புதிய நல்ல காற்றாக இருப்பதில்லை. நச்சுக் காற்றும் நிரப்ப முயலும்.
அதுபோல் ஒரு இனத்தின் தலைமையை நல்ல சக்திகள்தான் மேற்கொள்வார்கள் என்றில்லை. நஞ்சைப் போல் கொடிய தலைமைகளும் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
2009 ல் புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக கூறிய பின்னர் தமிழ் மக்களின் தலைமையில் வெற்றிடம் தோன்றியுள்ளது.
தமிழ் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஓரு நல்ல தலைமை தேவையாக உள்ளது.
இந்த நேரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னும் நச்சு தலைமையானது அதனை கைப்பற்ற முயல்கிறது.
தலைமை என்பது தானாக உருவாகுவதில்லை. மக்கள்தான் எப்போதும் தமக்கான தலைமையை உருவாக்கிறார்கள்
எனவே தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னும் நச்சு தலைமையை தூக்கியெறிந்துவிட்டு ஒரு புதிய நல்ல தலைமையை உருவாக்க முயல வேண்டும்.
இதுவே தமிழ் இனத்தின் முன் உள்ள அவசியமான அவசரமான பணியாகும்.
ஏனெனில் ஒரு நல்ல தலைமை இன்றி தமிழ் இனம் ஒருபோதும் விடுதலை பெற முடியாது.
துரோக தலைமைகளை வைத்தக்கொண்டு இன விடுதலை அடைவதை தமிழ் இனம் ஒருபோதும் நினைக்க முடியாது.

No comments:

Post a Comment