Monday, October 10, 2016

•பெருங் காட்டுத் தீயை சிறு பொறியே உருவாக்கிறது.

•பெருங் காட்டுத் தீயை சிறு பொறியே உருவாக்கிறது.
தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று திரள மாட்டார்கள் என்றார்கள். ஆனால் தமிழர்கள் ஒன்று திரண்டு பந்த் செய்து காட்டியுள்ளார்கள்
தமிழர்கள் ஒருபோதும் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க மாட்டார்கள் என்றார்கள். ஆனால் விக்ணேஸ் என்ற மாணவன் தன்னையே எரித்துக் காட்டியுள்ளான்.
தமிழர்கள் எவ்வளவு அடித்தாலும் ஒருபோதும் ஆயதம் தூக்க மாட்டார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் வெகுவிரைவில் தமிழர்கள் அதையும் செய்து காட்டுவார்கள்.
சிறு பொறிதான் பெருங் காட்டு தீயை மூட்டுகிறது. அதுபோல் சிறு பொறியாக மாணவர் போராட்டத்தில் குதித்தள்ளனர்.
மாணவர் போராட்டம் பெரும் காட்டு தீயாக பரவட்டும். எதிரிகளுக்க சரியான பாடம் புகட்டட்டும்.
மாணவர்கள் போராட்டம் எந்தவித பதவி நோக்கமும் கொண்டது அல்ல.
மாணவர் போராட்டம் எந்தவித சுயநலமும் கொண்டது அல்ல.
மாணவர் போராட்டம் சாதி மத பேதங்களை கடந்து அனைவரையும் ஒன்று திரட்டக் கூடியது.
பல உலக நாடுகளில் வெற்றி பெற்ற போராட்டங்கள் அனைத்தும் மாணவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
காவிரி பிரச்சனைக்காக மாணவர் போராட்டத்தில் குதித்திருப்பது அவர்களின் வரலாற்று கடமையாகும்.
அரசியல் கட்சிகள் யாவும் கைவிட்ட நிலையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கை அளிக்கும் விடயமாகும்.
தமிழ் மக்களின் ஆதரவோடு மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டத்தை வளாத்தெடுக்க வேண்டும். நிச்சயம் அதனை அவர்கள் செய்வார்கள்.

No comments:

Post a Comment