Monday, October 10, 2016

எதிரிக்கு எரிச்சல் வருகிறது எனில் நாம் எமது கருத்துகளுக்கு நேர்மையாக இருக்கிறோம் என்று பொருள்

எதிரிக்கு எரிச்சல் வருகிறது எனில் நாம் எமது கருத்துகளுக்கு நேர்மையாக இருக்கிறோம் என்று பொருள்
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள்,
•தமிழீழம் கோரவில்லை
•ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை
•இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லை
அவர் கேட்டதெல்லாம்
•ஜக்கிய இலங்கையில் சமஸ்டி தீர்வு
•இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை
•தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவ வெளியேற்றம்.
இதைக் கேட்டதற்காக சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சல் வருவது புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் சுமந்திரனுக்க ஏன் எரிச்சல் வருகிறது என்றுதான் புரிந்து கொள்ள முடியவில்லை?
“எழுக தமிழ் பேரணி” ஒரு இனவாதம் என சில தமிழர்களே கூறு முற்படுகின்றனர்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது யுத்தம் முடிந்து 7 வருடங்களாகிவிட்டது,
ஏன் இன்னும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை?
ஏன் இன்னும் காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை?
ஏன் இன்னும் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை?
ஏன் இன்னும் இனப்படுகொலை குறித்த விசாரணை செய்யப்படவில்லை?
நல்லாட்சி அரசு இனவாத அரசாக செயற்படுகிறது. ஆனால் அடக்கப்படும் தமிழ் இனம் தமது உரிமைகளை கேட்க கூடாதா?
பேரினவாதத்திற்கு எரிச்சல் வருகிறது என்பதற்காக தமிழினம் தொடர்ந்து அடிமைகளாக இருக்க வேண்டுமா?
தமிழர்களை விரட்டியடிப்போம் என்று ஒரு சிங்கள இனவாத பிக்கு பகிரங்கமாக விரட்டுகிறார்.
அவர் மீது இதுவரை இந்த “நல்லாட்சி” அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் முதலமைச்சர் விக்கி தனது பேச்சசை வாபஸ் பெற வேண்டும் என ஒரு அமைச்சர் மிரட்டுகிறார்.
சிங்கள இனவாதத்தை கண்டிக்காதவர்களுக்கு முதலமைச்சர் விக்கி பற்றி கருத்துகூற என்ன தகுதி இருக்கு?

No comments:

Post a Comment