Monday, October 10, 2016

யாழ்ப்பாணம் வளர்கிறதா?

•யாழ்ப்பாணம் வளர்கிறதா?
பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் கச்சேரி . டிக்கட் விலை பத்தாயிரம் ரூபா, ஜயாயிரம் ரூபா, ஆயிரம் ரூபா. லண்டன் கனடாவில் கூட இந்தளவு விலையில் டிக்கட் விற்பதில்லை.
கிரிக்கட் வீரர் மங்கல ஜயவர்த்தனாவை நடு ரோட்டில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த யாழ் தமிழ் யுவதி.
ஒரு காலத்தில் கல்வியில் முதலிடம் வகித்த யாழ் மாவட்டம் இன்று சாராய விற்பனையில் முதலிடம் வகிக்கிறது.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பாலியல் வல்லுறவு நிகழ்வுகள். யுத்தகாலத்தில்கூட இந்தளவு சம்பவங்கள் நடந்ததில்லை.
கல்லூரி வாசல்களிலேயே பகிரங்கமாக போதைப் பொருள் விற்பனை. கேரளாவில் இருந்து கோடிக்கணக்காண ரூபா பெறுமதியான கஞ்சா தினமும் கடத்தப்படுகிறது.
கோடி ரூபா பெறுமதியான சொகுசு பஸ் ஓடுகிறது. ஆனால் பஸ் நிலையத்தில் ஒழுங்கான சுத்தமான மலசலகூட வசதி இல்லை.
கோயில்கள் யாவும் புதுப்பிக்கப்பட்டு பல்லாயிரம் ரூபா செலவு செய்து திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் பல பாடசாலைகள் கூரை வேயப்படாமல் மழைக்கு ஒழுகுகின்றது.
ஊருக்கு ஒரு கோஸ்டிகள். வீடு புகுந்து இளம் பெண்களை இழுக்கிறார்கள். பாதுகாப்பற்ற நிலை. புலிகள் மீண்டும் வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அரசியல்வாதிகளோ இவை பற்றி எந்த அக்கறையும் இன்றி இருக்கிறார்கள். கேட்டால் யாழ்ப்பாணம் வளர்கிறது என்கிறார்கள்.
இதுவா வளர்ச்சி?
இதற்காகவா பல்லாயிரம் இளைஞர்கள் உயிர் துறந்தார்கள்?

No comments:

Post a Comment