Tuesday, June 27, 2023

15 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த

15 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனை சிங்கள அரசு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளது. ஆனால் 33 வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தனை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது. சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம்கூட இந்திய அரசுக்கு இல்லையா? உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் சொந்த செலவில் இலங்கை திரும்ப விரும்பினால் உடன் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. சாந்தன் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்தும் அவ் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? 1990ல் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில்தான் அவர் மகன் ஸ்டாலின் சாந்தனை அடைத்து வைத்திருக்கிறார் என்பதை ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் அறிவார்களா? பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியும்கூட சாந்தன் விடுதலையை இந்திய அரசு மறுத்து வருகிறது என்பதை அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டுவோர் அறிவார்களா? இந்தியாவில் இந்துச் சாந்தனை விடுதலைகூட செய்யாத இந்திய அரசு, ஈழத்தில் இந்து தமிழீழம் எடுத்து தரும் என எப்படி நம்பச் சொல்கிறார்கள்?

No comments:

Post a Comment