Tuesday, June 27, 2023
Chat GPT4 மற்றும் Bard AI பற்றி
Chat GPT4 மற்றும் Bard AI பற்றி கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆர்வ மிகுதியில் நானும் இவற்றை பயன்படுத்தி பார்க்க முனைந்தேன்.
முதலில் கலைஞர் தத்தெடுத்த ஈழ அகதிச் சிறுவன் பற்றி அறிய விரும்பினேன்.
Bard AI தன்னிடம் இது பற்றிய போதுமான தகவல்கள் இல்லை என்றது
Chat GPT4 யானது கலைஞர் ஈரான் சென்று கௌரி என்ற பெண்ணை தத்தெடுத்ததாகவும் அப் பெண் படித்து இப்போது மருத்துவராகியுள்ளதாக என்னென்னவோ கம்பி கட்டுற கதை எல்லாம் கூறுகின்றது.
அடுத்து கலைஞர் 1990ல் ஆரம்பித்த சிறப்பு அகதிகள் முகாம் பற்றிய விபரங்கள் அறிய விரும்பினேன்.
ஏனெனில் அப்போது வேலூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்புமுகாமில் கலைஞரின் உத்தரவின் பேரில் பொலிஸ் கமிஷனர் தேவாரம் சுட்டு இரண்டு ஈழ அகதி இளைஞர்கள் இறந்தனர்.
Chat GPT4 மற்றும் Bard AI இரண்டுக்குமே சாதாரண அகதிமுகாமிற்கும் சிறப்புமுகாமிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.
Chat GPT4 மற்றும் Bard AI இரண்டுமே சாதாரண அகதிமுகாம் பற்றிய சில விபரங்களை மட்டுமே தெரிவிக்கின்றது.
யாராவது இவற்றில் இது பற்றி விசாரித்து தகவல்கள் பெற்றிருந்தால் தயவு செய்து எனக்கு பகிருங்கள்.
குறிப்பு – புதிய தொழில் நுட்பம் பற்றிய இப் பதிவிலும் லாவகமாக கலைஞரைப் புகுத்திவிட்டேன் என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment