Tuesday, June 27, 2023
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில்
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சதீவில் புதிதாக எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிங்கள அரசு கச்சதீவில் புத்தர் சிலையை நிறுவியபோது அவ் ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசு தடுத்திருக்க முடியும். தடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்திய அரசு தடுக்கவில்லை. மாறாக கள்ள மௌனம் காத்தது.
குறிப்பாக, ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் குரு என அறியப்படும் தமிழக ஆர்எஸ்எஸ் பிரமுகர் குருமூர்த்தி அவர்களிடம் இது குறித்து முறையிடப்பட்டது. அவரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் மன்னார் ஆயர் பாப்பரசர் மூலமாக சிங்கள அரசு அந்த புத்தர் சிலையை அகற்றச் செய்துள்ளார்.
அதாவது கச்சதீவில் மன்னார் ஆயருக்கு இருக்கும் அக்கறைகூட இந்திய அரசுக்கு இல்லை என்பதே உண்மை.
இந்நிலையில் லண்டன் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கச்சதீவை மீட்போம் என்று கதை விட்டுள்ளார்.
ஈழத் தமிழினம் இன்னும் என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாதம் கேட்டுத் தொலைக்கனுமோ தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment