Saturday, February 26, 2022

இரயில் விபத்தில் கால்கள்

“இரயில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் உறவினர்கள் எல்லோரும் வெளிநாட்டிற்கு அழைத்தபோதும் பல்கலைக்கழக கல்வியை முடிக்கவேண்மென்ற ஆர்வத்தில் எங்களுடன் தொடர்ந்த விமலேஸ் அக்கா. ஒருநாள் வீதியில் வரும்போது அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் அவர்களது வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார். பின்னர் அவரது செயற்கை கால் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது” தன்னை மிகவும் பாதித்த பதிவு என நண்பர் ஒருவர் இப் பதிவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆம். உண்மைதான். இப்படி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்திற்கு இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எந்த நீதியும் வழங்கப்படவில்லை. சீக்கியர்களின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் மோடி தமிழினப் படுகொலைக்கு இதுவரை வருத்தம்கூட தெரிவிக்கவில்லை இந்திய பிரதமர் வருத்தம் தெரிவிக்கிறாரோ இல்லையோ ஆனால் அதற்குள் எமது இந்திய விசுவாசத் தலைவர்கள் ஓடிவந்து “அப்படி கேட்கக்கூடாது;. கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்றுத் தராமல் விட்டிடும்” என்கிறார்கள். இதுகூட பரவாயில்லை. தமிழகத்தில் சில திமுக உடன்பிறப்புகள் இதை இனி ஈழத் தமிழர்கள் நினைவு கூராக்கூடாதாம். ஏன் என்று கேட்டால், பாஜக பாசிசம் வந்திடும் என்று மிரட்டுகிறார்கள். என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை?

No comments:

Post a Comment