Saturday, February 26, 2022

இது செருப்பு அல்ல. நெருப்பு

•இது செருப்பு அல்ல. நெருப்பு சில தருணங்களில் பேனாவை விட “செருப்பு” வலிமையாக பேசுகின்றது "செருப்பு" காலில்;தான் தொங்குகிறது ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது. முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு. செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இன்றைய வரலாறு. இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது. சுமந்திரனின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிந்தது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நன்கு காட்டியுள்ளது. செருப்பு காட்டுவது, கொடும்பாவி எரிப்பது, செத்துப்போ என திட்டுவது எல்லாம் அநாகரிகம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இவை எல்லாம் மக்கள் தம் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு ஜனநாயகம் அனுமதிக்கும் வழிமுறைகள்தான். இந்த வழிமுறைகள் ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பேனாவை கையில் வைத்திருக்கும் ஒரு ஊடகவியலாளர்கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு தன் கால் சப்பாத்தை எறிந்து எதிர்ப்பை பதிவு செய்தார். உலகில் அதிகளவு அதிகாரம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதிக்கே செருப்பு வீசப்படும்போது சுண்டைக்காய் சுமந்திரனுக்கு வீசுவது எப்படி அநாகரீகம் ஆகும்?

No comments:

Post a Comment