Saturday, February 26, 2022

யாழ் மேயர் துரையப்பாவை “துரோகி”

யாழ் மேயர் துரையப்பாவை “துரோகி” என்று மேடைதோறும் பேசியவர் அமிர்தலிங்கமே. அதன்பிறகுதான் பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்றார். அதேபோன்று பொத்துவில் எம.பி கனகரத்தினம் கட்சி மாறியவுடன் அவரை துரோகி என்றும் அவருக்கு இயற்கை மரணம் வராது என்றும் பேசியவர் அமிர்தலிங்கமே. அதன்பிறகுதான் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் கொழும்பு சென்று கனகரத்தினத்தை சுட்டனர். இவ்வாறு துரோகி ஒழிப்பு அரசியலை ஈழப் போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தவர் அமிர்தலிங்கமே. புலிகள் இயக்கம் முதன் முதல் தமது தாக்குதல்களுக்கு உரிமைகோரி அனுப்பப்பட்ட கடிதம் அமிர்தலிங்கத்தின் கொழும்பு காரியாலயத்திலேயே தட்டச்சு செய்யப்பட்டது கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்காக அமிர்தலிங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர்கள் ஆஜராகி வாதாடினார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டபோது குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் நீதிமன்றத்தில் பேசிய வசனங்கள்கூட சிவசிதம்பரத்தால் எழுதிக் கொடுக்கப்பட்டவை என்று அப்போது பேசிக்கொண்டார்கள். தியாகி சிவகுமாரன் மரணத்தைக்கூட தமது தோதல் வெற்றிக்காக பயன்படுத்தியவர்கள் அமிர்தலிங்கமும் அவருடைய தமிழர்விடுதலைக் கூட்டணியினருமே. தன் வீட்டுக்கு அடிக்கடி பிரபாகரன் வருவார் என்றும் தன் கையால் புட்டு வாங்கி சாப்பிட்டவர் என்றும் அமிர்தலிங்கம் மனைவி மங்கையர்கரசி லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். இவ்வாறு இளைஞர்களை உசுப்பேற்றி வளர்த்துவிட்டிட்டு இப்போது அமிர்தலிங்கம் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று பகிரதன் கூறுவது என்ன நியாயம்? ஆனால் பகிரதன் கூற்றில் ஓரளவு உண்மை உண்டு. அதாவது ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கும் இளைஞர்கள் தன்னை மீறி வளர்வதை அமிர்தலிங்கம் ஒருபோதும் விரும்பவில்லை என்பது உண்மையே. (மிகுதி அடுத்த பதிவில்)

No comments:

Post a Comment