Saturday, February 26, 2022

தோழர் சிங்காரவேலர் நினைவுநாள்

•தோழர் சிங்காரவேலர் நினைவுநாள் வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது. அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார் ஆனால் அதன் பின் ஒருவர் மஞ்சள் பையுடன் திருட்டு ரயிலேறி வந்தார். தான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வருகிறேன் என்றார். ஆனால் அவர் இறக்கும்போது அவரது குடும்ப சொத்து மதிப்பு 45000கோடி ரூபா. இன்னொரு பெண்மணி வந்தார். அவர் மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ரூபாவுக்கு டான்ஸ் ஆடிய நடிகை. ஆனால் அவர் இறக்கும்போது அவரது சொத்து மதிப்பு 30000 கோடி ரூபா. பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காக தன் சொத்துகளை இழந்து குரல் கொடுத்த தோழர் சிங்காரவேலர் மறக்கப்பட்டுள்ளார். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டியவர்களுக்கு மெரினா கடற்கரையில் பல கோடி ரூபா செலவில் நினைவு சின்னங்கள். மக்கள் யாரை நினைவு வைத்திருக்க வேண்டும் யாரை மறக்க வேண்டும் என்பதைக்கூட அவர்களே தீர்;மானிக்கிறார்கள்.

No comments:

Post a Comment