Saturday, February 26, 2022

மறப்பது மக்கள் வழமை

மறப்பது மக்கள் வழமை அதை நினைவூட்டுவது எமது கடமை நாய் நன்றியுள்ள மிருகம்தான். ஆனால் அது தன் இனத்திற்கு விசுவாசமாக இருப்பதில்லை அது எலும்புத் துண்டை வீசும் எஜமானுக்கே விசுவாசமாக இருக்கும். அது எப்போதும் இறைச்சித்துண்டுக்காக வாலாட்டும் அது நடுக்கடலில் போனாலும் நக்கித்தான் குடிக்கும் எனவே அதற்கு “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்பாவியாய் கேட்டான் ஒருவன். அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் என்றேன் நான். “அடி செருப்பாலே நாயே” என்றான் அந்த ஒருவன் கோபத்தோடு. நாயைத் திட்டுகிறானா அல்லது நாயக்கு பட்டம் கொடுத்தவனை திட்டுகிறானா என்று தெரியவில்லை இவன் ரொம்ப கோவக்காரனாக இருக்கிறான் என்று நினைத்தபடி மௌனமானேன் நான்.. குறிப்பு - இதை படிக்கும்போது சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு இல்லை.

No comments:

Post a Comment