Saturday, February 26, 2022

ஈழத் தமிழருக்காய் உயிர்நீத்த தமிழ்வேந்தன்!

ஈழத் தமிழருக்காய் உயிர்நீத்த தமிழ்வேந்தன்! 2009ல் இதே நாளில் போரை நிறுத்தக் கோரியும் ஈழத் தமிழரை காப்பாற்றக்கோரியும் கடலூர் சோதி என்கிற தமிழ் வேந்தன் தீக்குளித்து உயிர் துறந்தார். தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காய் 16 பேர் உயிர் துறந்தனர். அதில் ஒருவர் தமிழ்வேந்தன். கடலுர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஈழத் தமிழருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடி அவர் தீக்குளித்தார். சாகும் தருவாயில் அவர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் “ ஈழத் தமிழரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத் தமிழருக்காக போராடுங்கள்” என்று கூறினார். அப்போது தமிழ்வேந்தனுக்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்தது. ஆனால் அவர் தன் குழந்தையைக்கூட நினைக்காமல் ஈழத் தமிழருக்காய் உயிர் துறந்தார். ஆனால் இத்தகையவர்களின் தியாகங்களை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கொச்சைப்படுத்தினார். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை அடக்கினார். அதேவேளை சிங்கள அரசும் இந்திய அரசும் சேர்ந்து நடத்திய தமிழின படுகொலைக்கு அவர் ஆதரவு வழங்கினார் அத்தகைய கலைஞருக்கு திமுக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கலாம். ஆனால் தமிழ்வேந்தன் போன்றவர்கள் தமிழர் மனங்களில் என்றும் நினைவு கொள்ளப்படுவர்.

No comments:

Post a Comment