Saturday, February 26, 2022

விசா முடிவடைந்துவிட்டது

விசா முடிவடைந்துவிட்டது என தமிழ்நாட்டில் தங்ககியிருந்த 19 வயது ஈழப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை. விசா இன்றி இருந்தமைக்கான தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்த அப் பெண் இலங்கை திரும்ப அனுமதி கேட்கிறார். அவர் மீது வேறு எந்த வழக்கோ குற்றச்சாட்டோ இல்லை. ஆனாலும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே அவர் வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தை நாடினார். அவர் நாடு திரும்ப உடனடியாக அனுமதி வழங்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதான் திராவிட முதல்வர் ஸ்டாலின் ஈழத் தமிழ் அகதிகள் மீது காட்டும் அக்கறை. இந்த அக்கறைதான் தமக்கு பெரும் நம்பிக்கை தந்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் லண்டன் குளோபல் தமிழர் அமைப்பும் அறிக்கை விட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அகதிகளின் துயரநிலையை சுட்டிக்காட்டினால் “அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள். திரும்பி வர வேண்டியதுதானே?” என்று சுமந்திரன் தம்பிகள் சிம்பிளாக கூறுகிறார்கள். ஆனால் அகதிகள் திரும்பிவர விரும்பினாலும் அதற்கான அனுமதியும் இலகுவாக பெற்றுவிட முடியாது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்ல அனுமதி கிடைத்தாலும் விசா இன்றி இருந்த காலத்திற்கான பெருந்தொகையான தண்டப்பணமும் கட்டவேண்டும் அகதியாக இருந்தவர்களால் எப்படி இந்தளவு தொகை பணம் கட்ட முடியும்? மோடி கடந்த முறை இலங்கை வந்தபோது திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு வசதியாக கப்பற் சேவை தொடங்கப்படும் என அறிவித்தார். அவர் மீண்டும் இலங்கை வரப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் இன்னும் கப்பற்சேவை ஆரம்பிக்கவில்லை. 13 தீர்வு கேட்டு கடிதம் எழுதிய நம் தலைவர்கள் இதற்கு ஒரு கடிதம் எழுதக்கூடாதா?

No comments:

Post a Comment