Saturday, February 26, 2022

இலாபம் எங்கிருந்து வருகிறது?

இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன.

No comments:

Post a Comment