Saturday, February 26, 2022

இரண்டு ஊடக நண்பர்கள். ஒருவர் தமிழர். மற்றவர் சிங்களவர்.

இரண்டு ஊடக நண்பர்கள். ஒருவர் தமிழர். மற்றவர் சிங்களவர். இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி சுமந்திரன் கொழும்பில் நடத்திய கையெழுத்து போராட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளார்கள். “பார்த்தியா எங்கட சேர் எப்படி கோத்தாவுக்கு பயப்படாமல் தைரியமாக போராட்டம் நடத்துகிறார்?” என்று சிங்கள ஊடகவியலாளரிடம் கேட்டார் தமிழ் ஊடகவியலாளர். அதற்கு” அது சரி. உங்கட சேர் ஏன் இப்ப போராட்டம் நடத்துகிறார். கடந்த ஆட்சியில் இவர் நினைத்திருந்தால் இலகுவாக நீக்கியிருக்கலாமே?” என்று சிங்கள ஊடகவியலாளர் பதிலுக்கு கேட்டார். ஆம். ஒரு சிங்கள ஊடகவியலாளருக்கே சுமந்திரனின் சுத்துமாத்து தெரிகிறது. ஆனால் சுமந்திரன் தம்பிகளால் ஏன் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை ? தமக்கு சொகுசு பங்களா, 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு எல்லாம் கேட்டுப் பெற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க மக்களிடம் கையெழுத்து கேட்பது ஏன்? அதுவும் இந்த தடைச்சட்டத்தின் கீழ் 20 அப்பாவி இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கும் சுமந்திரன் இச் சட்டத்தை நீக்க போராட்டம் நடத்துவதை என்னவென்று அழைப்பது? இவர்கள் தமிழ் மக்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார்களா?

No comments:

Post a Comment