Sunday, October 1, 2017

சீமான் 11 பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார். சம்பந்தர் எத்தனை பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார்?

சீமான் 11 பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார்.
சம்பந்தர் எத்தனை பிரதிநிதிகளை அனுப்பியுள்ளார்?
ஜெனிவாவில் ஜ.நா மனிதவுரிமை சபையின் 34 வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இதில் சீமானின் நாம்தமிழர் கட்சி 11 பிரதிநிதிகள் கொண்ட குழு கலந்து கொள்கிறது.
இவர்கள் அடுத்துவரும் 8 நாட்களும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மீறப்பட்ட மனித உரிமைகள் போன்ற செய்திகளை ஐநா மன்றத்தில் எடுத்துவைக்க இருக்கின்றார்கள்.
இந் நிலையில் ஈழத் தமிழர்களின் வாக்கைப் பெற்று பதவி பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு எத்தனை பிரநிதிகளை அனுப்பியுள்ளது?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தர், மாவை சேனாதிராசா, சுமந்திரன் போன்றவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?
தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் அக்கறைகூட ஈழத் தமிழர்களின் கட்சி என கூறிப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ஏன் இல்லை?
தமிழக தலைவரான சீமானுக்கு இருக்கும் உணர்வு கூட ஈழத் தமிழ் தலைவரான சம்பந்தருக்கு ஏன் இல்லை?
தனக்கு “வாழ்நாள் வீரர்” பட்டம் பெறுவதற்கு கனடா சென்ற சம்பந்தர் தமிழ் மக்களுக்காக நியாயம் கேட்க ஜ.நா வக்கு செல்ல முடியாதா?
அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்டு மக்களிடம் எந்த முகத்துடன் வரப்போகிறார் சம்பந்தர்?

No comments:

Post a Comment