Monday, October 30, 2017

•ஜப்பானின் ஓசி மீன் ரின் தின்று வளர்ந்தவர்கள்

•ஜப்பானின் ஓசி மீன் ரின் தின்று வளர்ந்தவர்கள்
இந்திய தூதர் 20 உழவு இயந்திரம் தந்ததை
பெருமையாக கூறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கு?
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜப்பான் வழங்கிய ரின் மீனை யாரும் மறந்திருக்க முடியாது.
ஜப்பான் இந்த ரின்மீனை இலவசமாக தந்ததால் அனைவரும் ஜப்பானை புகழ்ந்தார்கள்.
ஆனால் இந்த ரின்மீன் இலங்கை கடலில் பிடிக்கப்பட்டே இலவசமாக வழங்கப்பட்டது என்ற உண்மை பலருக்கு தெரிந்திருக்கவில்லை.
இலங்கையின் தென் கடலில் மீன் பிடிக்க ஜப்பானுக்கு அனுமதி வழங்கியிருந்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
ஜப்பான் பெரிய கப்பலில் வந்து மீன் பிடித்தார்கள். அக் கப்பலிலேயே ரின் மீனாக பக்கட் பண்ணினார்கள். அதிலிருந்தே இலவசமாக இலங்கைக்கு ரின்மீன் தந்தார்கள்.
ஒருநாளைக்கு பத்தாயிரம் பெட்டி மீன் பிடிக்கப்பட்டால் அதில் வெறும் பத்து பெட்டி மீன்களையே இலங்கைக்கு வழங்கினார்கள்.
அவர்கள் பிரமாண்டடமான வலைகளைப் பாவித்து முழு மீன்களையும் பிடித்ததால் காலியில் உள்ள சிங்கள மீனவர்கள் பாதிப்படைந்தார்கள்.
இறுதியில் சிங்கள மீனவர்களின் எதிர்ப்பால் ஜெயவர்த்தனா ஜப்பானுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தார்.
தமது வளங்கள் பறிபோவது தெரியாமல் அப்போது ஜப்பானின் ஓசி ரின்மீனை சந்தோசமாக சாப்பிட்டவர்களே தற்போது இந்தியா உழவு இயந்திரம் தந்தது என்று பெருமை கொள்கிறார்கள்.
•முழு இலங்கைக்கும் 60 வருடங்களுக்கு போதுமான மன்னார் எண்ணெய்வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
•ஆசியாவிலேயே சிறந்த ரக நிலக்கரி புத்தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வளமும் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
•புல்மோட்டை இல்மனைட் மற்றும் தோரியம் கனிமவளம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
•திருமலை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
•காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை திக்கம் வடிசாரய தொழிற்சாலை யாவும் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
•பலாலி விமான நிலையம், சம்பூர் அனல்மின் நிலையம் யாவும் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.
•சம்பூரில் 650 ஏக்கர் நிலம் உட்பட பல தமிழர் நிலங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா தமிழ் மக்களின் கட்டிய கோவணத்தைக்கூட உருவிக்கொண்டிருக்கிறது.
அது புரியாமல் சில நாய்க்குட்டிகள் இந்திய தூதர் உழவு இயந்திரம் தருவதாக வாலாட்டுகின்றன. மன்னிக்கவும் பெருமை கொள்கின்றன.
என்னே கேவலம் இது?

No comments:

Post a Comment