Sunday, October 1, 2017

தலைவர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் போராடும் மக்களை வாங்க முடியாது!

•தலைவர்களை விலைக்கு வாங்கலாம்
ஆனால் போராடும் மக்களை வாங்க முடியாது!
தமிழ் தலைவர்களுக்கு பதவியும் சலுகைகளும் வழங்கி அவர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இல்லாமற் செய்துவிட முடியும் என இலங்கை அரசு நினைத்தது.
ஆனால் தலைவர்களை விலைக்கு வாங்கினாலும் போராடும் மக்களை வாங்க முடியாது என்பதை ஈழத் தமிழ் மக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்கட்சிதலைவர் பதவியும் கொழும்பில் வசிப்பதற்கு இரு பங்களாக்கள் அதுவும் ஒரு பங்களாவை திருத்துவதற்கு மட்டும் 4 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு.
இவற்றைவிட இவருக்கு பாதுகாப்பிற்கு 30க்கு மேற்பட்ட சிங்கள காவலர்கள், இருதய அறுவைச்சிசிகிச்சை டில்லி மருத்துவமனையில் என பல்வேறு சலுகைகள்
இதேபோல் சுமந்திரனுக்கு அதிரடிப்படை காவல். ஜனாதிபதி சட்டத்தரணி பதவி மற்றும் பெருந்தொகையான பணம் பிரதமர் ரணில் மூலம் வழங்கப்பட்டமை
பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம்.
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் சொகுசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று பதவியைப் பெற்றவர்கள் அரசின் சலுகைகளுக்கு சோரம் போய்விட்டனர். தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதையே கைவிட்டுவிட்டனர்.
ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றார்கள்.
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம் 200 வது நாளையும் கடந்து தொடர்கின்றது.
கேப்பாப்பிலவில் மக்களின் போராட்டமும் 6 மாதங்களை கடந்து தொடர்கின்றது.
ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்களின் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி ஜ.நா வாசலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவுள்ளனர்.
இதன் ஒரு அங்கமாக சில இளைஞர்கள் ஈருளிப் பரப்புரை பயணம் செய்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் கருத்துக்கள் பல்வேறு நாடுகளில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு சென்றடைந்து கொண்டிருக்கிறது.
என்றாவது ஒருநாள் உலக மக்களின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையை இப் போராட்டங்கள் ஏற்படுத்துகின்றன.

No comments:

Post a Comment