Monday, October 30, 2017

30 வருடங்களுக்கு மன்னர் கொல்லப்பட்ட தோழர் தமிழரசனுக்கு இன்றும் இந்திய அரசு அஞ்சுவது ஏன்?

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
22 hrs
•30 வருடங்களுக்கு மன்னர் கொல்லப்பட்ட
தோழர் தமிழரசனுக்கு இன்றும் இந்திய அரசு அஞ்சுவது ஏன்?
எவன் பெயரைச் சொன்னால் எதிரி அஞ்சி நடுங்கிறானோ அவனே உன்னுடைய தலைவன்.
தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் பெயரைவிட எதிரி அஞ்சி நடுங்கும் பெயர் வேறு என்ன?
தமிழரசன் கொல்லப்பட்டு 30 வருடமாகிவிட்டது. இன்றும்கூட இந்திய அரசு அவர் பெயருக்கு அஞ்சி நடுங்குகிறது.
தமிழரசனை சதி செய்து கொலை. அதுபோதாதென்று அவர் ஆரம்பித்த கட்சிக்கு தடை. அதற்கும் மேலாக அவர் உருவாக்கிய தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தடை.
இத்தனை செய்தும் தமிழரசன் புதைகுழியில் இருந்து ஆயிரம் ஆயிரமாக தமிழரசன்கள் முளைப்பதை தடை செய்ய முடியவில்லை.
கொள்ளைக்காரன் என்றார்கள். கொலைகாரன் என்றார்கள். பயங்கரவாதி என்றார்கள். ஆனால் மக்கள் மனதில் அவர் மாபெரும் புரட்சியாளராக வீற்றிருப்பதை நீக்க முடியவில்லை.
வாருங்கள். தோழர் தமிழரசன் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
இன்று (30.10.2017)மாலை 6 மணிக்கு சென்னை கே.கே. நகரில் டிஸ்கவரிபேலசில் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் நூலைப் பெற்றுக்கொள்ள – தோழர் தமிழநேயன் - தொலைபேசி இலக்கம்- 9751014559
கனடாவில் நூலைப் பெற்றுக்கொள்ள – முருகன் புத்தகசாலை – தொலைபேசி இலக்கம்- 416 321 0285
லண்டனில் நூலைப் பெற்றுக்கொள்ள – பௌசர் புத்தக கடை – தொலைபேசி இலக்கம்- 07817262980
குறிப்பு – வெகு விரைவில் இலங்கையிலும் பிரான்சிலும் நூல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

No comments:

Post a Comment