Monday, October 30, 2017

தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவருக்கு இன்னொரு நியாயம் இதற்கு பெயர் நல்லாட்சியாம்!

•தமிழருக்கு ஒரு நியாயம்
சிங்களவருக்கு இன்னொரு நியாயம்
இதற்கு பெயர் நல்லாட்சியாம்!
பாராளுமன்றத்தின் மீது வெடி குண்டு வீசுவேன் என்று விமல்வீரவன்ச பகிரங்கமாக கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. விசாரணையும் செய்யப்படவில்லை.
ஆனால் மன்னார் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சிவகரனை கொழும்பக்கு அழைத்து நாட்டின் அமைதியை குழப்ப முனைவதாக விசாரணை செய்துள்ளார்கள்.
அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தப் போவதாக கூறியே மக்கள் ஆதரவு பெற்று வந்துள்ளனர் இன்றைய ஆட்சியாளர்கள்.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தினால் அனைவரையும் சுட்டுக் கொல்வேன் என முன்னாள் ராணுவ தளபதி கமால் கருணாரட்ன மிரட்டியுள்ளார்.
இந்த முன்னாள் தளபதி ஆட்சியாளர்களை மிரட்டியதன் மூலம் அவர்களுக்கு வாக்கு போட்ட மக்களை அவமதித்துள்ளார்.
ஆனால் இந்த ராணுவ தளபதியின் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணைக்கு அழைக்கப்படவும் இல்லை.
ஒருவேளை ஒரு தமிழர் இவ்வாறு பேசியிருந்தால் இந் நேரம் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பார். ஜாமீனில் வரமுடியாத பயங்கரவாத சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பார்.
தமது வழக்கை வவுனியா நீதிமன்றில் விசாரிக்கும்படி 3 அரசியல் கைதிகள் 30 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அதேவேளை கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு தாமதமாகக்கூட நீதி வழங்கப்படாமல் மறுக்கப்படுகிறது.
ஆனால் இதை நல்லாட்சி என சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் கூறுகின்றனர்.
ஒருவேளை சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும் சுமந்திரனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவியும் வழங்கியதால் நல்லாட்சி என்கிறார்களோ தெரியவில்லை.

No comments:

Post a Comment