Sunday, October 1, 2017

போhராடத் துணிந்துவிட்டவர்களை சிறைச்சாலை என்ன செய்துவிட முடியும்?

•போhராடத் துணிந்துவிட்டவர்களை
சிறைச்சாலை என்ன செய்துவிட முடியும்?
சிரித்துக்கொண்டே களம் காண்பவர்களை
அரசால் இனி எப்படி மிரட்டிவிட முடியும்?
நான்கு மாதம் சிறையில் அடைத்தால் தானாக வழிக்கு வருவார்கள் என்று அரசு திட்டம் போட்டது.
மெழுகு திரியுடன் அஞ்சலி செலுத்தியவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தது.
ஆனால் அவர்களோ வெளியில் வந்ததும் 40 வருடம் அடைத்து வைத்தாலும் தமது போராட்ட உணர்வை கைவிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்கள்.
நெடுவாசல் மக்களுக்கு குரல் கொடுத்த மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
சோதனை என்னும் பெயரில் நிர்வாணப்படுத்தி சிறையில் அந்த மாணவியை சித்திரவதை செய்தார்கள்.
ஆனால் அந்த மாணவியோ விடுதலையானதும் நாலு மணி நேரத்திற்குள் நீட் போராட்ட களத்தில் நின்றாள்.
மதுரையில் ஆறு இளைஞர்களை கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
அதில் தோழர் தமிழரசன் கலை என்பவர் சுமார் நான்கு ஆண்டு சிறைவாசத்தின் பின்னர் ஜாமீனில் விடுதலை பெற்றுள்ளார்.
விடுதலையானதும் அவர் தனது வீட்டிற்கு செல்லவில்லை. நேராக சென்று தோழர்களை சந்தித்து போராட்டப் பணியாற்றுகிறார்.
இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமது போராட்டப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.
ஒருவர்கூட சிறைக் கொடுமைகளுக்கு அஞ்சி தமது போராட்ட உணர்வை கைவிடப்போவதாக கூறவில்லை.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் இவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே சிறை காண்கிறார்கள்.
இவர்களுடைய சிரிப்பு இவர்களை சிறையில் தள்ளிய அரசுக்கு முகத்தில் காறி உமிழ்ந்தது போல் இருக்கிறது.
அதுமட்டுமல்ல இவர்களுடைய குடும்பத்தினரும் “இவர்கள் சிறை சென்றது குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக” கூறியது அரசுக்கு செருப்பால் அடித்துபோல் இருந்திருக்கும்.
இப்போது அரசும் அதன் ஏவல்நாயான காவல்துறையும் இனி இவர்களை எப்படி மிரட்டி அடக்குவது என்று முழித்துக்கொண்டிருக்கின்றன.
ஆம். இனி ஆயிரக் கணக்கில் அல்லவா இளைஞர்களும் மாணவர்களும் சிரித்துக்கொண்டு களம் காணப் போகிறார்கள்!
அவர்களை எல்லாம் எப்படி மிரட்டி அடக்குவது? இனி இவர்கள் ஆயுதத்தை ஏந்திவிட்டால் என்ன செய்வது? இதுதான் அரசின் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி!

No comments:

Post a Comment