Monday, October 30, 2017

•குற்றவாளி சுவிஸ்குமாரை காப்பாற்றிய அமைச்சர் விஜயகலா உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை காப்பாற்றுவாரா?

•குற்றவாளி சுவிஸ்குமாரை காப்பாற்றிய அமைச்சர் விஜயகலா
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை காப்பாற்றுவாரா?
மாணவி வித்யா கொலைக் குற்றவாளி சுவிஸ் குமாரை நள்ளிரவில் ஓடிச் சென்று காப்பாற்றியமைக்காக நீதிமன்றத்தால் கண்டனம் தெரிவிக்கப்பட்டவர் அமைச்சர் விஜயகலா.
ஆனால் அவரோ தான் மக்கள் மீது அக்கறை கொண்டதாலேயே நள்ளிரவில் ஓடிச் சென்றதாக கூறி வருகிறார்.
தமிழ் மக்கள் மீது இந்தளவு அக்கறை கொண்ட ஒரு ஜதேக கட்சி அமைச்சரை நான் இதுவரை கண்டதில்லை.
சரி. பரவாயில்லை. அவர் சொல்வதை உண்மை என்று நம்புவோம். இப்போது எமது கேள்வி என்னவெனில் 11 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மீது ஏன் அமைச்சர் அக்கறை கொள்ளவில்லை?
ஜனாதிபதியை வரவழைத்து அவர் முன்னிலையில் தன் மகளின் அரங்கேற்றத்தை நடத்திய அமைச்சர் விஜயகலா இந்த அரசியல் கைதிகளுக்காக ஏன் ஜனாதிபதியை சந்திக்கவில்லை?
உண்ணாவிரதம் இருப்பவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தமது வழங்கை தொடர்ந்தும் வவுனியா நீதிமன்றத்தில் நடத்தும்படியே கேட்கின்றனர்.
இவ் அரசியல் கைதிகளின் கோரிக்கையானது நியாயமானதும் சட்டரீதியானதும்கூட. இருந்தும் அரசு வேண்டுமென்றே வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியுள்ளது.
அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பாக மந்திரிசபையில் நேரடியாக ஜனாதிபதிடம் முறையிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் விஜயகலா இவ் அரசியல் கைதிகள் விடயத்தில் அக்கறை செலுத்தாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
மாகாணசபை அமைச்சர் ஆனந்தி குரல் கொடுத்துள்ளார். சம்பந்தர் அய்யா தானும் கடிதம் எழுதியுள்ளதாக கூறுகிறார்.
நாளைய தினம் இவ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக வடக்கு கிழக்;கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் நடைபெறவுள்ளது.
ஆனால் ஆளும் ஜதேக கட்சியின் தமிழ் அமைச்சரான விஜயகலா அம்மையார் இது தொடர்பாக எந்த அக்கறையும் இன்றி இருக்கிறாh

No comments:

Post a Comment