Sunday, October 1, 2017

தோழர் செந்தமிழ்குமரன் அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் செந்தமிழ்குமரன் அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் செந்தமிழ்குமரன் அவர்கள் தமிழ்தேசமக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆவார். அவர் “தோழர் லெனினும் தமிழ்தேச விடுதலைக்களமும்” என்னும் நூலை எழுதியுள்ளார்.
தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுத்து வரும் தோழர்களில் ஒருவரான செந்தமிழ்குமரன் அவர்கள் எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் செந்தமிழ்குமரன் அவர்கள் தெரிவித்த கருத்தக்கள் வருமாறு,
தோழர் பாலன் அவர்களால் தொகுக்கப்பட்ட இந்த நூல் தோழர் தமிழரசனையும் அவரது போராட்ட வரலாற்றையும் அறிந்து கொள்ளாத புதிய தலைமுறை இளையர்களுக்கு மிகத் தேவையான ஒரு நூல்
தோழர் தமிழரசனைப் பற்றி அவர் மேற்கொண்ட மா.லெ.மாவோவியத் தத்துவத்தைப் பற்றியும் அத் தத்துவம் ரசியாவிலும் சீனாவிலும் எப்படி வெற்றியடைந்தது அதை எப்படி தமிழ்நாட்டுக்கு பொறுத்துவது என்ற அளவில் தங்களின் மேற்கோள்கள் மிகச் சிறப்பு.
சாதியத்திற்கெதிரான போராட்டங்களில் தோழர் தமிழரசனின் போராட்டக் களம் செயல்பாடு ஆகியவற்றோடு ஈழத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான சாதியெதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தான தகவல்களும் அருமை
தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற தாங்கள் பங்குபெற்றிருந்த பேரவை பற்றியும் தோழர் நெப்போலியன் பற்றியுமான தகவல்கள் தமிழகம் அறிந்திராதவை. அதை சொன்னதற்கே தாங்கள் பாராட்டப்படவேண்டியவர்
தோழர் தமிழரசனின் வங்கி நடவடிக்கைகளையும் அவரது ஆயுத நடவடிக்கைகளையும் காட்டி அவரை பயங்கரவாதி எனக் கூறுவோருக்கு புலிகள் இயக்கம் பற்றியும் போராளி சிவக்குமரன் பற்றியுமான மேற்கோள்களோடு பதிலடி கொடுத்திருப்பது சிறப்பு.
தோழர் தமிழரசனுடனான புலவர் கலியபெருமாளின் நட்பு புலவரின் ஈகம் தோழர்கள் மாறன் ,லெனின் ஆகியொரின் ஈகம் எனப் பக்கங்கள் விரிவதும் நன்று.
ஈழத்தில் இந்திய விரிவாதிக்கம் குறித்தான கட்டுரை நீளம் அதிகம் என்றாலும் தேவையானக் கட்டுரையே. அதையும் தோழரின் அரசியல் களத்தோடு தமிழக - தமிழீழ விடுதலையோடு இணைப்பது மிகச் சிறப்பு.
மொத்தத்தில் சில தகவல்கள் இடம் மாறி வந்திருந்தாலும் சிறப்பாகவே சொல்லி தோழர் தமிழரசனின் தனிப்பட்ட குணநலன்களையும் போராட்டக் குணத்தையும் சொல்லி நூலை எழுதியதற்கு எமது கட்சி சார்பிலும் தமிழகத் தமிழர்கள் சார்பிலும் அளவற்ற நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
தங்கள் அரசியல் பணிக்கு என்றும் துணையாக
தோழமையுடன்
செந்தமிழ் குமரன்

No comments:

Post a Comment