Sunday, October 1, 2017

தோழர் வேலன்(Tholar velan )அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
“ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் வேலன்(Tholar velan )அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் வேலன் அவர்கள் ஒரு நீண்டகால மார்க்சிய லெனினிய மாவோயிய செயற்பாட்டாளர். அவர் “ தேசிய இயக்கம் துயிலெழல்” “ தேசிய இயக்கங்களின் காலம்” என்னும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் வேலன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாபறு,
2009 பின்னராக தமிழகச் சூழலில் தோழர் தமிழரசன் பற்றிய வரலாற்றினை அறிவதில் இளையோர் அதிகம் ஆர்வம் காட்டுவது வரலாற்றுத் திருப்புமுனையும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
தோழர் தமிழரசன் பற்றிய விவாதம் இரண்டு நிலைப்பாடுகளை விளக்கமாக சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கப்படவேண்டியதாக இருக்கின்றது.
சமூகமாற்றத்தில் சாதியத்திற்கு எதிராக எதிர்வினையாற்றுவதும் தொடர்ந்தும் போராடுவது பற்றிய வழிகாட்டல்.
நிலப்பிரபுத்துவ பொருளுற்பத்தி முழுமையாக மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதும், பழைய பொருளுற்பத்தி சனாதன சிந்தனை வடிவத்தையும், தேசிய இயக்கம் வளர்ந்து வருகின்ற போது ஏற்படுகின்ற சிக்கல்களை களைவதற்கான வழிகாட்டல்.
ஆகவே இரண்டு கட்டங்களை முன்னெடுப்பதற்காக வழிகாட்டும் பாதையில் ஈழத்தின் மார்க்சிய தத்துவார்த்த வளர்ச்சியை விட 30 வருடம் முன்னோக்கி நிற்கின்ற தமிழகப் புரட்சியாளர்களை வாழ்த்திப் போற்றுவதில் மகிழ்வு கொள்ளல் வேண்டும்.
ஏகாதிபத்தியங்கள் யுத்த சூழல் கொண்டிருக்கையில் உள்நாடுகளின் மோதல்கள் ஏற்படுத்துகின்றது என்பது ஏகாதிபத்தியத்தினைக் காட்டியே தேசிய இனங்கள் தங்கள் அடிமைத்தனத்தை சகித்துக் கொள்ளுங்கள் என்று போதிக்கப்படுகின்றது.
ஆண்டபரம்பரை தமிழீழம் கேட்கின்றார்கள், தமிழீழம் சாத்தியம் இல்லையென அப்பவே சொன்னோம், சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவது என்று அர்த்தமில்லை, முற்போக்கு தேசிய சக்திகள் தலைமை தாங்கினால் அவர்களுடன் போராடத்தயார், என்பது போன்ற வாய்ப்பாட்டு வாதமே இலங்கை மார்க்சியர்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றது.
‘‘இந்தி இனத்தின் பாட்டாளி வகுப்பு அரசியல் ஆற்றலாக ஆளும் வகுப்பை தூக்கியெறியும் வரையில் சிறு தேசிய இனங்கள் ஒடுக்கலைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்பது மார்க்சியம் அல்ல” (127 பக், தோழர் கலியப்பெருமாள்)
இதுதான் தோழர் தமிழரசன் ஈழ தேசத்தின் போராட்டத்தினை ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான புரிதலை விளங்கிக் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவப் புரட்சி முழுமையாக நடைந்துவிடாத இடத்தில் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை சிதைக்காத வரையில் தேசிய இனங்களுக்கான தீர்வு, ஐக்கிய இலங்கைக்கான புரட்சி கனிந்த நிலையில் இல்லாத நிலையில் சுதந்திர தேசத்தினை அமைத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்பது தான் மார்க்சிய லெனினியம் காட்டும் காரணமாகும்.
தோழர் தமிழரசன் அவர்களின் மீன் சுருட்டி அறிக்கை தமிழ்த் தேச விடுதலை, சாதியொழிப்புப் போராட்டம், சாதியை ஒழிப்பது, தமிழ்த் தேச விடுதலைக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் உடனடி அவசியம்.
மார்க்சியரீதியான இந்த வழிகாட்டல் என்பது அடையாள ரீதியாக சாதியை அணிதிரட்டிக் கொள்வதற்கு மாற்றான திட்டமாகும்.
இந்தப் புத்தகத்தில் சாதியெதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக வழிகாட்டில் முறையாக ஓழுங்குபடுத்தப் பட்டுள்ளது.
தோழர் தமிழரசன் அந்த அறிக்கைக்கு ஏற்ப நடைமுறையில் செயற்படுத்திக் காட்டியதையும், ஈழத்தில் 1966 ஆண்டுகளில் எவ்வாறு சாதியெதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்ட பாடங்களை சாதியெதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளும் படிப்பினையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அண்மையில் தமிழகம் சென்ற போது சமூகச் செயற்பாட்டாளர்களுடன் உரையாட முடிந்தது. அப்போது வாய்ப்பாட்டு மார்க்சியர்களின் சாதியம் பற்றிய 80களில் பேசிய பேச்சை ஆதாரமாகக் காட்டி சாதியத்தின் தன்மையை தமிழகத்துடன் பொதுமைப்படுத்தி வாதித்திட்டார்கள்.
சமூகத்தை சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி பேசிய பேச்சுகள் எம்மீது தாக்கத்தினை ஏற்படுத்துவதற்காகும்.
சுயபரிசோதனை செய்வதும் என்பது ஒன்று ஆனால் சமூகத்தின் அரசியல் போக்கும் இரண்டும் வித்தியாசமானவை. நாம் என்ன பொருளாதார அமைப்பில் வாழ்கின்றோம் அது எவ்வாறு முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கின்றது என்ற புரிதல் அவசியமானது.
போராட்ட காலத்திலேயே புதிய பண்பாட்டை எவ்வாறு அடிநிலை மக்களுடன் வாழ்வதன் ஊடாக படைக்க முடியும் என்ற தோழர் தமிழரசனின் வழிகாட்டல் தான் முன்னுதாரானமாக பாதையாகும்.
தனியே சமபந்தி சமபோசனம், சாதியம் இருக்கின்றது, சாதிய முரண்பாட்டை களைந்த பின்னர் போராட்டத்தினை நடத்துவோம் என்ற அடையாள அரசியல் பாதையில் இருந்து அல்ல.
பார்த்தீர்களா சைவவேளாளத்தின் கொடூரத்தை தோழர் பாலன் சாட்சி, நடைபெற்றது ஈழ தேசத்தின் போராட்டம் அல்ல. யாழ் சைவ வேளாளர்களின் ஆண்ட பேண்ட பரம்பரையில் போராட்டமே. நாம் (தலித்தியவாதிகள்) கூறினாலும் ஏற்றுக் கொள்ளாமல் தேசியம் போலியே என்பார்கள்.
இந்தப் புத்தகத்தில் சாதியக் கட்டமைப்பு எவ்வாறு ஈழத்தில் மாறுதலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்ற பார்வையைத் தொட்டுச் சென்றிருக்க வேண்டும்.
அடையாள அரசியலை முன்னிறுத்தும் போக்கில் அரசியல் செயற்பாடுகள் இருக்கின்றதை எதிர்க்கொள்ளும் வகையில் வழிகாட்டலும் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
இதே வேளை ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் விடுதலையை தோழர் தமிழரசன், முள்ளிவாய்க்கால் அனுபவத்தையும் தொட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இறுதியாக தேசிய இனப் போராட்டத்தை வர்க்க அடிப்படையில், சமூகத்தை அணிதிரட்டுவது, சமூக மாற்றத்தினை முன்னிபந்தனையைக் கொண்டு, புதிய பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்ற அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
இது அடித்தவனுக்கு அடி என்பது புரட்சிகர ஜனநாயக, இடதுசாரி, தேசிய, புரட்சிகர சக்திகளால் மாத்திரமே போராட்டத்தை முன்னெடுத்துவிட முடியும்.
சமூகமாற்றம்- சாதியெதிர்ப்பு- தேசிய இனவிடுதலை புதிய சனநாயகப் போராட்ட வழிமுறையே இறுதிப் பாதையை வெற்றியை நோக்கி வழிநடத்தும்.

No comments:

Post a Comment