Sunday, October 1, 2017

•எப்போதும் பலிபீடங்களில் வெட்டப்படுவது ஆடுகளே யன்றி சிங்கங்கள் அல்ல!

•எப்போதும் பலிபீடங்களில் வெட்டப்படுவது
ஆடுகளே யன்றி சிங்கங்கள் அல்ல!
நாளை வித்யா வழக்கில் தண்டனை பெறப்போவதும் ஆடுகளேயொழிய சிங்கங்கள் அல்ல.
நாளை இந் நேரம் மாணவி வித்யா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் வித்யாவுக்குரிய நீதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமாரின் மாபியா வியாபார பின்புலங்கள் விசாரிக்கப்படவில்லை.
முக்கிய குற்றவாளியான சுவிஸ்குமார் செய்ததாக கூறப்படும் வேறு கொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படவில்லை.
முக்கியமாக குற்றவாளி சுவிஸ் குமாரை தப்ப வைத்தமைக்காக தமிழ்மாறன், விஜயகலா போன்றவர்கள் விசாரணை செய்யப்படவில்லை.
குற்றவாளி சுவிஸ்குமாரை தப்ப உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
குற்றவாளி சுவிஸ்குமாருக்கு உதவியதாக கூறப்படும்; பொலிஸ் அதிகாரி கஜனுக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குற்றவாளி சுவிஸ் குமாரின் வியாபாரத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படும் வித்யா கற்பழிப்பு வீடியோவும் நீதிமன்றத்தில் சாட்சியாக வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்த வழக்கு விசாரணை என்பது தமிழ்மாறன், விஜயகலா போன்ற சிங்கங்களை தப்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நாடகமாகவே இருக்கிறது.
ஆம். நீதிமன்றம் வீசும் வலைகளில் எப்போதும் சிறிய மீன்களெ மாட்டுகின்றன. பண திமிலங்கள் மாட்டுவதில்லை.
அதை நாளைய வித்யா வழக்கு தீர்ப்பும் உறுதிப்படுத்தப் போகின்றதா?

No comments:

Post a Comment