•என்ன தவம் செய்தோம்?
சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட?
சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட?
இவர் ஒரு ஈழத் தமிழர். மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்தவர். தனது இரண்டு மகள்களை மாவீரர்களாக கொடுத்தவர்.
இன்று இவருடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு எட்டு லட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது.
இந்த பணவசதி அற்ற ஏழை தமிழர் உதவி கேட்டு தமிழர்களின் தலைவர் என்று கூறப்படும் சம்பந்தர் அய்யாவை சந்தித்துள்ளார்.
வழக்கமாக இவ்வாறு மக்கள் உதவி கேட்கும்போது சம்பந்தர் அய்யாவுக்கு காது கேட்பதில்லை. கண் தெரிவதில்லை.
ஒருவேளை அவை எல்லாம் வேலை செய்தாலும் “தன்னிடம் திறப்பு இல்லை” என்று நக்கலாக அலட்சியமாக பதில் சொல்லுவார்.
ஆனால் இந்த ஏழைத் தமிழர் சொல்லும்போது அவருக்கு காதுகள் கேட்டன. கண்கள் நன்கு தெரிந்தன. அதுமட்டுமன்றி நக்கலாக எந்த பதிலும் சொல்லவில்லை.
எனவே சம்பந்தர் அய்யா தேவையான பண உதவியைச் செய்யப்போகிறார் என அந்த அப்பாவி ஏழைத் தமிழர் நம்பினார்.
ஆனால் சம்பந்தர் அய்யாவோ கொடுத்தது வெறும் 400 ரூபாய் மட்டுமே. இத்தனைக்கும் இந்த ஏழைத் தமிழர் சம்பந்தர் அய்யாவை பார்வையிட சென்ற பயணச் செலவே 1000ரூபாய்க்கு மேல்.
இந்த கொடுமையை கண்ணுற்ற அங்கு பணிபுரியும் சிங்கள பொலிஸ்ஒருவர் இந்த ஏழைத் தமிழர் மீது இரக்கப்பட்டு புஞ்சி பண்டார என்ற சிங்கள அரசியல்வாதியை சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.
அந்த சிங்கள அரசியல்வாதி உடனடியாக 5000 ரூபா கொடுத்து அந்த ஏழைத் தமிழருக்கு உதவியுள்ளார்.
ஒரு சிங்கள அரசியல்வாதிக்கு இருக்கும் உணர்வுகூட தமிழர் தலைவர் என்று கூறும் சம்பந்தர் அய்யாவுக்கு இல்லாமற் போய்விட்டதே.
இதே சம்பந்தர் அய்யா கடந்த வருடம் தனது இருதய சத்திர சிகிச்சையை இந்தியாவில் புகழ்பெற்ற டில்லி மருத்துவமனையில் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தர் அய்யா மட்டுமன்றி அவரது குடும்பத்தவர்கள் அனைவருமே இந்தியாவில் சிறந்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பந்தர் அய்யாவின் கொழும்பு இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயின்ற் அடிக்கவென்று மட்டும் 4 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தர் அய்யா அரசிடம் இருந்து நிதிபெற்று திருகோணமலையில் காளி கோயில் கட்டி கும்பாசிசேகம் நடத்துகிறார்.
சம்பந்தர் அய்யா மட்டுமன்றி அவரது மகன் மற்றும் மகள் கொழும்பில் சுற்றி திரிவதற்கும் சொகுசு வாகனமும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு இத்தனையும் கிடைக்க ஓட்டுப் போட்ட அந்த ஏழைத் தமிழருக்கு உதவ அவருக்கு மனம் வரவில்லையே!
இரண்டு மகள்களை மாவீரராக கொடுத்த தாய்க்கு மருத்து சிகிச்சைக்காக கையேந்தும் நிலை இருக்கிறதே, இதைவிடக் கொடுமை வேறு என்ன இருந்துவிட முடியும்?
No comments:
Post a Comment