•நமக்கு வாய்ச்சது தலைவர்கள் அல்ல தறுதலைகள்!
தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் இல்லை. தேர்தல் வந்தாலும் ஈழத் தமிழர் ஆதரவு என்று சொன்னால் ஓட்டு விழுந்துவிடப் போவதில்லை.
இருந்தாலும் முதல் நாள் தஞ்சையில் மாநாடு நடத்திவிட்டு அடுத்தநாள் ஜெனீவா வந்து ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கிறார் தலைவர் வைகோ அவர்கள்.
ஜ.நா உள் அமர்வில் இருந்து முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு அவர் நீதி கேட்டு உரையாற்றுகிறார்.
பின்னர் ஜ.நா முன்றலில் மக்களுடன் சேர்ந்து நடந்து ஊர்வலம் போகிறார் அதே தலைவர் வைகோ அவர்கள்.
ஆனால் அதேவேளை எமது வாக்கில் பதவி பெற்ற எம் தலைவர் சம்பந்தர் அய்யா இனப்படுகொலை செய்த மகிந்தவிடம் சென்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் வாருங்கள் என்று அழைக்கிறார்.
இன்னொரு தலைவர் சுமந்திரன் கடந்த வருடம் ஜ.நா வந்தார். இலங்கை கேட்காமலே ஒன்றரை வருட கால அவகாசம் பெற்றுக் கொடுத்தார்.
இவர் முதலில் நடந்தது இனப் படுகொலை அல்ல என்றார். பின்னர் சர்வதேச நீதிபதிகள் கொண்ட உள்ளக விசாரணை என்றார். இப்போது இது பற்றி எதுவுமே அவர் வாய் திறப்பதில்லை.
முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூட நடந்த குற்றங்கள் பற்றி விசாரணை வேண்டும் என்று கூறுகிறார்.
ஆனால் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியும் அதிரடிப்படை பொலிஸ் பாதுகாப்பும் பெற்ற பின்னர் சுமந்திரன் போர்க்குற்ற விசாரணை பற்றி எதுவும் பேசுவதில்லை.
அடுத்த தலைவர் மாவை சேனாதிராசா ஜ.நா வக்கு வருவதில்லை. ஆனால் தனக்கு நிதி சேகரிக்க கனடாவுக்கு மட்டும் சென்றுவிடுகிறார்.
இந்த எம் தலைவர்களுக்கு பல கோடி ரூபா செலவில் சொகுசு பங்களாக்கள். ஓடித் திரிவதற்கு 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம் என இலங்கை அரசு வழங்குகிறது.
இவர்கள் தமிழ் தலைவர்கள். ஆனால் தமிழ் பகுதிகளுக்கு வருவதற்கு இவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்.
இவர்கள் தமிழ் மக்களின் தலைவர்கள் அல்ல. தறுதலைகள்.
No comments:
Post a Comment