Sunday, October 1, 2017

•இதுதானா இந்திய நீதிமன்றத்தின் நியாயம்?

•இதுதானா இந்திய நீதிமன்றத்தின் நியாயம்?
7 வயது குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்ற தஷ்வந் என்ற இளைஞருக்கு போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆனால் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தியமைக்காக திருமுருகன்காந்தி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை இன்னும் நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வேண்டுமென்றே விசாரணையையும் தீர்ப்பையும் தாமதப்படுத்துகிறது.
1.9.17 : அரசின் தலைமை வழக்கறிஞர் புதிதாக வழக்கில் இணைந்தமையால் வழக்கைப் பற்றி தெரிந்து கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று வழக்கு 5 ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
5.9.17 யன்று அரசு இன்னும் கால அவகாசம் கேட்டது. வழக்கு 7 ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது.
7.9.17 யன்று அன்றைய அலுவல் நேரம் முடிந்துவிட்டதால், நீதிபதி வழக்கை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
8.9.17 யன்று நீதிபதி விடுப்பு எடுத்துள்ளார். வழக்கு 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
11.9.17 : தலைமை வழக்கறிஞர் விடுப்பு எடுத்தமையால், வழக்கு விசாரனை 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது...
13.9.17 யன்று வழக்கு விசாரிக்கப்படுமா அல்லது நீதிமன்றத்திற்கே விடுமுறை விடப் போகிறார்களா என்று தெரியவில்லை.
வேண்டுமென்றே அரசு மற்றும் பொலிசாருடன் சேர்ந்து நீதிமன்றமும் திருமுருகன் காந்திக்குரிய நீதியை தாமதப்படுத்துகிறது.
தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும். திருமுருகன் காந்திக்கு நீதி மறுக்கப்படுகிறது.
ஆனால் நீதிமன்றம் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்று இன்னமும் சிலர் அப்பாவித்தனமாய் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment