Monday, October 30, 2017

ஒருவரை ஏமாற்ற வேண்டும் எனில் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்.

•ஒருவரை ஏமாற்ற வேண்டும் எனில்
அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்.
மலையக தமிழ் மக்களை ஏமாற்ற யாழ் இந்திய தூதர் செய்யும் தந்திரம் இதுவே!
கடந்த 21.10.17 யன்று வன்னியில் விவசாயிகளை சந்திக்க சென்ற யாழ் இந்திய தூதர் கிளிநொச்சி வாழ் மலையக தமிழ் மக்களுக்கு கூறிய ஆசை வார்த்தைகள்
•இந்தியா சென்று உயர் கல்வி பெறுவதற்கு முழு உதவி வழங்கப்படும்
•விருப்பமானவர்கள் இந்தியாவுக்கான வாழ்நாள் விசா பெற்றுக்கொள்ளலாம்.
•வாழ்நாள் விசா பெறுபவர்கள் விரும்பினால் இந்தியாவில் வசிக்க முடியும்.
ஒருபுறம் இந்தியாவில் 34 வருடமாக தங்கியிருக்கும் ஈழ அகதிகளுக்கு விசா வழங்க மறுக்கும் இந்திய அரசு மறுபுறம் கிளிநொச்சியில் உள்ள மலையக தமிழர்களுக்கு விசா வழங்க தயார் என்கிறது.
ஒருபுறம் அகதி என்ற காரணத்தால் இந்தியாவில் ஈழ அகதிக்கு உயர் கல்வியை மறுக்கும் இந்திய அரசு மறுபுறம் கிளிநொச்சியில் உள்ள மலையக தமிழருக்கு உயர் கல்வியை தருவொம் என்கிறது.
ஒருபுறம் அகதிகளை பிடித்து சிறப்புமுகாமில் அடைக்கும் இந்திய அரசு மறுபுறம் கிளிநொச்சி மலையக தமிழர் இந்தியாவில் வசிக்க முடியும் என்கிறது.
அது சரி, கிளிநொச்சி மலையக தமிழர் மீது ஏன் யாழ் இந்திய தூதருக்கு திடீர் பாசம் வந்துள்ளது?
சம்பூரில் தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் வேடுவ இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய ஆக்கிரமிப்பை முறியடித்துள்ளார்கள்.
எனவேதான் அதன்பின் இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் மேற்கொள்ளுகின்றன.
அதன்மூலம் இலங்கை மீதான தனது ஆக்கிரமிப்பை தொடர முடியும் என இந்திய அரசு கருதுகிறது.

No comments:

Post a Comment