Sunday, October 1, 2017

•திலீபன் மரணம் கற்றுத் தரும் பாடம் என்ன?

•திலீபன் மரணம் கற்றுத் தரும் பாடம் என்ன?
உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஜ.நா முன்றலில் வைகோ அவர்களும் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரின் தியாகத்தைப் போற்றிப் பேசினார்.
திலீபன் தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவரது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவையும் அல்ல.
இருந்தும் இந்திய அரசு அவரது அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை.
திலீபன் மட்டுமல்ல அன்னை பூபதியும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.
அந்த தாயாரின் அகிம்சைப் போராட்டத்தையும்கூட இந்திய அரசு மதிக்கவில்லை.
காந்தியின் தேசம் எனப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை அரசு அகிம்சைப் போராட்டத்தை மதிக்குமா? ஒருபோதும் மதிக்கப் போவதில்லை.
தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டங்களை இலங்கை அரசு வன்முறை மூலம் நசுக்கியதாலே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
ஆனால் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள்; ஒரு உண்மையை மக்களுக்கு மறைக்கிறார்கள்.
அதாவது அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியாது என்ற உண்மை திலீபன் மரணம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இளைஞர்களின் ஆயுதப் போராட்டப்பாதை பயனற்றது என்றும் இனிமேல் இளைஞர்கள் ஒருபோதும் ஆயுதம் தூக்கக்கூடாது என்றும் சுமந்திரன் கூறுகிறார்.
அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒரு சிறிய தீர்வைக்கூட பெற முடியாத என்ற உண்மையை திலீபன் மற்றும் அன்னை பூபதியின் மரணங்கள் கற்றுத் தருகின்றன.
இந்த உண்மையை மக்களுக்கு சொல்லாமல் மூடி மறைத்து இலங்கை இந்திய அரசுகளுக்கு மறைமுகமாக உதவுகிறார்கள்.

No comments:

Post a Comment