Monday, October 30, 2017

கீரன் அவர்கள் ( Keeran Sithamparappillai) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்தக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
டென்மார்க்கில் இருக்கும் கீரன் அவர்கள் ( Keeran Sithamparappillai) “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தனது கருத்தக்களை தெரிவித்துள்ளார்.
புழல் சிறை அனுபவங்களைக் கொண்டிருக்கும் கீரன் ஒரு சிறந்த உணர்வாளர். அவர் அண்மையில் “மனம்” என்னும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
எனது நூலைப்படித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட கீரனுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
என் அன்பு வணக்கம் தோழர் பாலன் அவர்களுக்கு
தாங்கள் எழுதிய ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற புத்தகத்தை எனக்கு படிக்க கிடைத்தது ஒரு பாக்கியமாக கருதுகின்றேன்
இதை ஒரு சாதாரணமான நூலாக என்னால் எண்ணமுடிய வில்லை இது எம் இனத்தின் வரலாற்று பகுதிகளை உள்ளடக்கிய அழகிய பதிவு
இது போன்ற நூல்கள் நிச்சயம் பாதுகாக்க படவேண்டும் எம் பின்வரும் இனத்தவர்களுக்கு எம் இனத்திற்காக பாடுபட்டவர்களின் வரலாறுகள் தெரிந்திருக்க வேண்டும் அவர்களை மனதார நினைவு கூறவும் வேண்டும்
தோழர் தமிழரசனை பற்றி அப்பப்போது நான் உங்கள் பதிவுகளில் தான் வாசித்திருக்கின்றேன் பெரிதாக எந்த ஒரு அபிப்பிராயமும் இருந்ததில்லை ஆனால் இன்றைய இந்த நூலை வாசித்ததும் என் மனதில் பெரும் இடத்தை பிடித்துக்கொண்டார்
கடல் கடந்தும் எம் இனத்திற்காக சிந்தித்து படை திரட்டி ஒன்றாக போராடவேண்டும் என்ற அவருடைய சிந்தனை மட்டும் அன்று நிறைவேறி இருந்தால் இன்று தமிழினம் உலகளவில் தனி நாடமைத்து தலை நிமிர்ந்தே நின்றிருக்கும்
ஈழ விடுதலை போராளிகளுக்கு இந்தியா உதவியதும் அவர்களின் தேவைகள் முடிந்ததும் ஈழ போராளிகளை இந்தியா அழிக்கும் என்ற அன்று தோழர் தமிழரசனின் சிந்தனையை ஈழ போராளிகள் ஏற்கவில்லை என்பது மிக கவலை அளிக்கின்றது
இருந்தும் தோழர் தமிழரசனின் தொலைநோக்கு பார்வை சிறந்த ஆளுமைக்கு ஏற்ற தலைவன் என்பதை வெளிப்படுத்துகின்றது (தோழர் சண்முதாசனும் இந்த கருத்தை கூறி இருப்பது பாராட்டுக்குரியதாக அமைகின்றது)
சமையல் சம்பத்தமான விடயமும் விறகு தூக்கிய கதையும் கூட ஒரு சக தோழராகவே இருந்திருக்கின்றார், இறுதி நேரம் அவர் கையில் சப் மிசின்கன்(அந்த நேரத்தில் அது பெரும் ஆயுதம்) இருந்தும் தான் தப்பிக்க அதை பயன் படுத்த வில்லை என்று எண்ணும் போது மனதில் ஆழமான இடத்தை பிடிக்கின்றார் தோழர் தமிழரசன்
தோழர் தமிழரசன் கூப்பிட்டிருந்தால் நானும் போய் இருப்பேன் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன்
என்ற உங்கள் சிந்தனைக்கு காலம் சிலரை காக்கும் என்பது உண்மை நல்லவர்களின் கதையை எடுத்து செல்ல இன்று நீங்கள் எழுதாது விட்டால் தோழர் தமிழரசனை நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை...காலம் கைவிடாது
1991 ஆண்டு நானும் காரணம் இன்றி புழல் சிறை முகாமில் அடைக்கப்பட்டேன் வேதனையான நாட்கள் நினைவிற்கு வந்தது...... இந்த புத்தகத்தை வாசிக்கும் போது
ஈரோஸ் அமைப்பில் எனக்கு பிடிப்பு உண்டு தோழர் நெப்போலியன் படுகொலைக்கு காரணமாக கூலிப்படையாக இருந்திருக்கின்றார்கள் என்று எண்ணும் போது வேதனை
எம்மவர்களால் தான் எமக்கு இன்னும் விடுதலை சுகந்திரம் கிடைக்க வில்லை.
உங்களுக்குள் இருந்த சின்ன சின்ன சந்தோச நினைவுகளையும் துக்கங்களையும் எம் இனத்துக்காக பாடு பட்டவர்களின் வரலாறுகளையும் நினைவுகளையும் எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றியும் கூறுகின்றேன்
இந்த புத்தகம் எம் இனத்தவர்களுக்காக காக்கப்பட வேண்டும் என்று கூறி எனக்கும் கருத்தளிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்
அன்புடன் சி. கீரன்

No comments:

Post a Comment