Monday, October 30, 2017

•சூரன் போர் !

•சூரன் போர் !
கடவுள் கந்தன் தன் வேலாயுததால் சூரனைக் கொன்றார் என்று இன்று சூரன் போர் கொண்டாடப்பட்டுள்ளது.
இங்கு,
ஆயுதம் ஏந்திப் போராடியதால் கடவுள் கந்தனை யாரும் பயங்கரவாதி என்று கூறியதில்லை
ஏன் அகிம்சை வழியில் போராடி சூரனை வெற்றி கொள்ளவில்லை என்று கடவுள் கந்தனிடம் யாரும் கேட்பதில்லை.
தேர்தல் பாதையின் மூலம் சூரனிடம் தீர்வு பெற்றிருக்கலாம்தானே என்று யாரும் கடவுள் கந்தனிடம் சொன்னதில்லை.
பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் யாரும் கடவுள் கந்தனை கைது செய்ததில்லை.
ஆனால் போராளிகள் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினால்,
•பயங்கரவாதிகள் என்கிறார்கள்
•பயங்கரவாத சட்டத்தில் கைது செய்கிறார்கள்
•அகிம்சை வழியில் போராடு என்கிறார்கள்
•தேர்தலில் போட்டியிடு என்கிறார்கள்.
இங்கு எமது கேள்வி என்னவெனில்,
நாம் கடவுள் கந்தன் காட்டிய வழியில் ஆயுதம் எந்திப் போராடுவதா?
அல்லது
சம்பந்தர் அய்யா கூறுவதுபோல் தேர்தலில் போட்டியிட்டு பதவி பெற்று சுகம் அனுபவிப்பதா?
இன்று,
கந்தன் ஏந்திய ஆயுதம் இருக்கு
கந்தன் காட்டிய வழி இருக்கிறது
ஆனால் போராடுவதற்கு கந்தன்தான் இல்லை

No comments:

Post a Comment