•150 நாளாக போராடும் இரணைதீவு மக்கள்!
யுத்தம் முடிந்து 7 வருடங்களாகிவிட்டது. இன்னமும் இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
பசில் ராஜபக்ச உல்லாச ஓட்டல் கட்டுவதற்காக இரணைதீவில் மக்கள் மீண்டும் குடியேறுவதை தடுப்பதாக கடந்த ஆட்சியில் சொன்னார்கள்.
இப்போது ஆட்சி மாறிவிட்டது. பசில் ராஜபக்சவும் ஓட்டல் கட்டும் திட்டத்தை கைவிட்டுவிட்டார். இருந்தும் இன்னமும் ஏன் மக்கள் குடியேற அனுமதிக்கப்படவில்லை?
இரணைதீவு மக்கள் 150 நாளாக போராடுகிறார்கள். ஆனால் நல்லாட்சி அரசு அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
கொழும்பில் உள்ள ரோங்கியோ அகதிகளுக்கு இலங்கை அரசு இரங்குகிறது. ஆனால் இரணைதீவு மக்கள் அகதிகளாக இருப்பதையிட்டு இரங்க மறுக்கிறது.
இதில் இன்னும் வேதனை என்னவென்றால் ஜே.வி.பி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட இரணைதீவு மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்கள்.
ஆனால் தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யாவோ அல்லது மாவைசேனாதிராசாவோ இந்த மக்களை சந்திக்கவும் இல்லை. இவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் இல்லை.
என்ன செய்வது? எல்லாம் தமிழ்மக்களின் தலைவிதி என்று நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி என்ன இருக்கு?
No comments:
Post a Comment